Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெறும்வயிற்றில் கண்டிப்பாக உண்ண‌வேண்டிய முக்கிய உணவுகளும் பானங்களும்!

வெறும்வயிற்றில் கண்டிப்பாக உண்ண‌வேண்டிய முக்கிய உணவுகளும் பானங்களும்!

வெறும்வயிற்றில் கண்டிப்பாக உண்ண‌வேண்டிய முக்கிய உணவுகளும் பானங்களும்!

தினமும் அதிகாலையில் கண்விழித்த‍தும் பல் துலக்கியபிறகு வெறும் வயிற்றில் சில

உணவுகளை சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெ றும் வயிற்றில் சாப்பிடவேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.

1. இளஞ்சூடான நீர்

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்து வதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்து ணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும்.  மலச் சிக்கலைச் சரிசெய்யும்.

2. வெந்தயம் நீர்

வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தயநீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத் தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

3. தேன்

இளஞ்சூடான நீரில் தேன் கலந்தருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மை யாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்றுஎரிச்சலைக் குறைக்கு ம். செரிமானத்துக்குஉதவும். மலச்சிக்கலை சரிசெய்யு ம். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடை யைக் குறைக்கும்.

4. காய்கறிகள்

கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாக சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலை சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியா க்கும். ரத்தழுத்தத்தை குறைக்கும். உடல் எடை யைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப் பாக்கும். கொழுப்பை குறைக்கும்.

5.பழங்கள்

வெறும்வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம்பெறும். உடலின்சக்தி அதிகரிக்கு ம். சருமம் பொலிவுபெறும். தினமும் காலையில் வெறும்வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர் பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வதுநல்லது. அதுபோ ல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற் றில் சாப்பிட கூடாது. பழங்களை வேக வைத்துச் சாப்பிடக் கூடாது.

6. அரிசிக்கஞ்சி

குறைந்தளவு கலோரி கொண்டது. கஞ்சி உடலில்உள்ள நச்சு நீரை வெளி யேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண் டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படு த்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி6, பி12 அதிகமாக உள்ளன. வயதுமுதிர் ந்த தோற்றத்தை யும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட் டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள க் கூடாது.

7.உளுந்தங்களி

பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக் கொள்ள வேண்டு ம். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாக கிண்டி ச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களி ல் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளை ப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத்தரும்.

8.முளைக்கட்டிய பயறு

முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதயநோயில் இருந்து நம்மைக்காக்கும். உடல்எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத் தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக்செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: