Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளமைக்கு அழகும், அழகுக்கு இளமையும் கொடுக்கும் 'விட்ட‍மின்களும் பிற சத்துக்களும்'! -ஓரலசல்

இளமைக்கு அழகும், அழகுக்கு இளமையும் கொடுக்கும் ‘விட்ட‍மின்களும் பிற சத்துக்களும்’! -ஓரலசல்

இளமைக்கு அழகும், அழகுக்கு இளமையும் கொடுக்கும் ‘விட்ட‍மின்களும் பிற சத்துக்களும்’! -ஓரலசல்

பொதுவாக  அழகாகவும், ஆரோக்கியமாகவும் பெண்கள்…. தங்களை வைத்துக்

கொள்ளவேண்டும் என்றே விரும்புவார்கள்.  அவர்கள் அழகிற்கு பெருமதி ப்பு கொடுத்து தம் அழகில் ஆண்கள் மயங்க வேண் டும் என்பதும், மற்றைய பெண்கள் தம்மைப் பற்றி பெருமையாக பேசிக்கொள்ள வேண்டும் என்பதும் எல்லாப் பெண்களுக்கும் பொதுவான ஒரு எதிர் பார்ப்பாகும்.

உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில்மகிழ்ச்சி காண்பார்கள். அதற்காக என்ன விலை கொடுத்தாலும் அழகுதான பொருட்களை பெற்றுக் கொள்ளத் துடிப்பார்கள். தமிழ் பெண்களைப் பொறுத் த வரையில் கலாச்சாரம் கலந்த, நீளமான கூந்தலும், மென்மையான வசீகரமான சருமத்தை கொண்ட தோ ற்றம் உடையவர்களாக விளங்குவதற்கும், அவர்களி ன் ஆசைகளை குறைந்த செலவில் நிறைவேற்ற ஊக்குவிப்பதுமே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஒவ்வொரு வைட்டமின்னுக்கும் உடலைக் கட்டுப்படுத்தும் பல வேலைகள் இருக்கின்றன. இதனால் ஒன்று குறைந்தாலும் சமநிலை இழ ப்பு ஏற்படும். ”பி” வைட்டமின்கள் நீரில் கரைய க் கூடியவை. அதனால் உடலில் சேமித்து வை க்க முடியாது என்பதால் தினமும் அவற்றை சாப்பிட வேண்டியது கட்டா யமாகின்றது.

சிறுவயதிலேயே முதியதோற்றம் ஏற்படுவதை ‘ தயமின் என்ற பி1 வைட்டமின்” தடுக்கும். வைட்ட மின் பி1 சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், ஓட்மீல், சோயா பீன்ஸ், முந்திரி போன்றவற்றில் கிடைக்கி றது.

தோல் மற்றும் உடலில் உள்ள எல்லா செல்களும் புதுப்பிக்கப் பயன்படும் ”ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி2” பால், முட்டை, இறைச்சி, கல்லீர ல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் கிடைக்கி ன்றன.

செல்மெட்டாபாலிசம், கார்போஹைட்ட்ரேட் கிரகிப்புக்கு ‘நியாசின் என்ற வைட்டமின் பி3” தேவை. இதன் மூலம் ஆற்றல் கிடைப்பதோடு, இறந்த செல்கள் அழிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டு, புது செல்கள் உருவாக்கும் மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசி யில் இந்த வகை வைட்டமின் கிடைக்கிறது.

சுழற்சியை தடுத்து, கொழுப்பு உடைதலை வேக மாக்கி பருக்கள் உருவா காமல் தடுக்கிறது ”வைட்டமின் பி5” மக்காச் சோளம், முட்டை, சீஸ், இறைச்சி, தக்காளியில் கிடைக்கிறது.

தோலின் எண்ணெய் பசைமிக்க பகுதிகளில் செதில் உரியும் நோயை சரிசெய்ய  உதவுவது முழு தானிய ங்கள், கல்லீரல், பயறுகள், வாழைப்பழம் போன்ற வற்றில் கிடைக்கும் ‘பைரிடாக்சின் என்ற வைட்ட மின் பி6’ ஆகு ம்.

கூந்தல் வளர்ச்சிக்கும், சருமம், நகங்கள் மெரு கேறுவதற்கும் உதவுவது  ‘பயோடின் என்ற வை ட்டமின் பி7’ ஆகும். இவை பயறுவகைகள், பழங் கள், காய்கறிகள், முட்டை,சீஸ் போன்றவற்றில் கிடைக்கிறது.

இரத்த சிவப்பணுக்கள் உருவாகி, மெருகேற்றுவ தற்கு ‘போலிக்அமிலம் என்ற வைட்டமின் பி9” தேவைப்படுகிறது. இவைகள் கூந்தலின் ஆரோக் கியத்திற்கும், இளநரையை தடுக்கவும் உதவுகிற து. இந்த சத்து வைட்ட மின் பசலைக்கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகம் போன்றவற்றில் உள் ளது.

சருமத்தின் செல்களை புதுப்பித்து அழகுப்படுத்தும் வேலையை “கோபா லமின் என்ற வைட்டமின் பி 12” செய்கிறது. இவை முட்டை, கோழி, தயிர், பால் பயறு போன்றவற்றில் கிடைக்கிறது.

உடலில் செல்களை பராமரிப்பதற்கான ஆற்றலைத் தருவதற்குத் தேவை யான கலோரிகளை பெற ”B” வைட்டமின் கள் உதவுகின்றன. இறந்த செல்களை மாற்றுவது, சருமத்தை இளமையாகவும், மிருதுவாகவும், வைத்திருக்க உதவும் எண்ணெய் உற்பத்தி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்கள் உதவுகின்றன. வைட்டமின் என்பது அழகுக்கு மட்டுமல்ல  ஆரோக்கி யத் திற்கும் இன்றியமையாதது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‌

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

 
 

Leave a Reply