கடவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்!
கடவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்!
ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொ ண்டு
பூஜிப்பதுதான் வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தை யும் வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் அர்ச்சனைக்கு உபயோகிக்கும் மலர்களைக் கொண்டு நமக்கு கிட்டும் பலன்கள் வித்தியாசப் படும். ஆம் தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியாக பலன்கள் நமக்கு கிட்டும் என்பது இங்கு காண்போம்.
*
1) செந்தாமரை மலர்
செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தன லாபம், தொழில் முன்னேற்றம் கூடும்.
*
2) மனோரஞ்சிதம், பவழமல்லி மலர்கள்
மனோரஞ்சிதம், பவழமல்லி மலர்களால் அர்ச்சனை செய்தால் நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும்.
*
3) மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை, நந்தியா வட்டை மலர்கள்
மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை, நந்தியா வட்டை மலர்களால் செய்யும் அர்ச்சனை மன சஞ்சலம் நீக்கும். புத்திக் கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்றவற்றைத் தரும்.
*
4) மரிக்கொழுந்து, மாசி பச்சை மலர்கள்
மரிக்கொழுந்து, மாசி பச்சை ஆகியவற்றால் அர்ச்சனை செய்தால் சுக போகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும்.
*
5) செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி மலர்கள்
செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்கஅரளி மலர்களால் அர்ச்ச னை செய்தால் கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும்.
*
6) செம்பருத்தி, அடுக்கு அரளி மலர்கள்
செம்பருத்தி, அடுக்கு அரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும்.
*
7) நீலநிற சங்குப்பூ மலர்கள்
நீலநிற சங்குப்பூவினால் அர்ச்சனை செய்தால் வறுமை, அவச்சொல், அபாண்டங்கள்நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும்.
*
8) கருந்துளசி, வில்வம், மகிழம்பூ மலர்கள்
கருந்துளசி, வில்வம், மகிழம்பூ அர்ச்சனை செய்தால், சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும்.
=>பத்தாம்வகுப்பு மாணவி, செல்வி பவித்ரா. vidhai2virutcham@gmail.com என்ற எமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிவு