தொடரும் பலாத்காரங்கள்… பீதியில் நடிகைகள்… குவியும் புகார்கள்… திணறும் காவல்துறை
தொடரும் பலாத்காரங்கள்… பீதியில் நடிகைகள் … குவியும் புகார்கள்…. திணறும் காவல்துறை
கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். இந்த
சம்பவம்பற்றி அவர் துணிச்சலாக புகார்கொடுத்த தை தொடர்ந்து இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டன ம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதைப் போல பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தற்போது
வெளிப்படுத்தி வருகிறார்கள்.
நடிகை மேனகா, அவரதுமகள் நடிகை கீர்த்திசுரேஷ் ஆகி யோர் தங்களையும் கடத்தமுயற்சி நடந்த தகவலை வெளிப் படுத்தி உள்ளனர். நடிகை வரலட்சுமியும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி நடந்ததாக திடுக்கிடும் புகார் கூறிஉள்ளார். இந்த வரிசையில் நடிகை பாவனாவின் நெரு ங்கிய தோழியான காதல் சந்தியாவும் சேர்ந்துள்ளார். அவ ரும் பாலியல்கொடுமைக்கு ஆளானதானவும் இது பற்றி முன்பே மக்கள்முன் தெரிவிக்கவோ, போலீசில் புகார் செய்யவோ தனக்கு தைரியம் இல்லை என்ப தையும் குறிப்பிட்டுள்ளார். இன்னும்பல நடிகைகள் காவல்துறையில் புகார்கொடுத்து, பெயர் வெளயில வராமல் பார்த்துக் கொள்ளுமாறும் காவல்துறையினரி
டம் கேட்டுக் கொ ண்டதாகவும் தகவல். இதுபோன்ற நடிகைகளுக்கு தொடரும் பலாத்காரங்களால் நடிகைகள் பலர் பீதி யில் உள்ளனர். காவல் நிலையங்களில் குவியும் புகார்களால் திணறிக் கொண்டிருக்கிறது காவல் துறை.
சமுதாயத்தில் பிரபலமான நடிகைகளாக வலம் வரும் இவர்களுக்கே பாலியல்தொந்தரவு என்றால், சாதாரண பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு சொல்லித்தான் தெரிய வேண்டுமோ. பெண்குழந்தைகள், சிறுமிகள், இளம்பெ ண்கள், கர்ப்பிணிகள், வயதுமுதிர்ந்தபெண்கள், இவர்க ள் மட்டுமல்லாமல் சிறுவர்களும் பாலியல் தொந்தரவு க்கும் பலாத்காரத்திற்கும் ஆளாகிவருவது
வேதனை அளிக்கும் விஷயமாகவே இருக்கிறது.
மொத்தத்தில், சாதாரணபெண்களுக்கும்சரி, பிரபலமான பெண்களுக்கும்சரி உரியபாதுகாப்பை வழங்குவது காவ ல்துறை கடமை என்று நினைக்காமல், அந்த பெண்களின் சகோதரர்களாக இருந்து அவ்வாறு பாலியல் தொந்தரவுக் கு ஆட்படும் பெண்களுக்கு அரணாக இருந்து அவர்களை காப்பாற்றி, அந்த மனித மிருகத்தை காவல்துறைவசம் ஒப்படைத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கு ம்.
— விதை2விருட்சம் சத்தியமூர்த்தி