Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குண்டுபெண்கள்- மறுக்க‍முடியாத மருத்துவ‌ உண்மை

குண்டு பெண்கள்… – மறுக்க‍ முடியாத மருத்துவ‌ உண்மை

குண்டு பெண்கள்… – மறுக்க‍ முடியாத மருத்துவ‌ உண்மை

இந்த மனித வாழ்வில் எந்த ஒரு கட்டத்தில் எதிர்பார்ப்பு என்பது இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த வரிசையில் 

க‌ணவன் மனைவி இருவருமே மிகவும் குண் டாக இருந்தால், அவர்கள் கருத்தரிப்பதில் சிரமத்தை சந்திப்பார்கள் என ஒரு சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு ள்ளது. இப்போது அந்த ஆய்வு குறித்து காண்போம். ஒருவர் மிகவும் குண்டாகிவிட்டால், பல தீவிர பிரச்ச னைகள சந்திக்கநேரிடும் என்பது அனைவருக்குமே தெரியும். உடல் பருமன் அதிகரித்தால், அதனால் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக் கக்கூடும் என்பதும்தெரியும். ஆனால் அதே உடல்பரும ன் ஒருவரது கருவளத்தை பாதிக்கும் என்பதுதெரியுமா?

உடல்பருமன் என்னும்நிலை, ஒருவரது உயரத்திற்கு ஏற்ற அளவில் எடை இல்லாமல், அளவுக்கு அதிகமாக இருக்கும்நிலையாகும். உடல்பருமனால் கஷ்டப்படுபவ ர்கள், மூட்டுவலி, சோர்வு, உயர்கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதயநோய் போன்ற பல பிரச்சனை களாலும் அவஸ்தைப்படுவார்கள். சமீபத்திய ஆய்வு ஒன் றில், தம்பதியர்கள் இருவருமே மிகவும் குண்டாக இருந்தா ல், அவர்கள் கருத்த ரிப்பதில் சிரமத்தை சந்திப்பார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இப்போது அந்த ஆய்வு குறித்து காண்போம்.

ஆய்வு

சமீபத்தில் சுகாதார தேசிய நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, குண்டான தம்பதிய ர்களைக்கொண்டு ஆய்வுஒன்றை மேற்கொண்டது.
 
59% குண்டான தம்பதிகள்

இந்த ஆய்வில் ஆரோக்கியமான உடல் எடையைக் கொ ண்டவர்களை விட, 59% குண்டான தம்பதிகள், குழந் தையைப் பெற்றெடுக்க பல காலம் எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டது.
 
இரண்டு குழுக்கள்

ஆராய்ச்சியாளர்கள் தம்பதியர்களை 2 குழுக் களாகப் பிரித்துக் கொண்டனர். அதில் முதல் குழுவில் 35க்கும் அதிகமான BMI கொண்ட தம்பதிகளையும், 2வது குழுவில் 20-30 அளவி லான BMI கொண்ட தம்பதிகளையும் பிரித்து கொண்டனர்.
 
முதல் குழு

இந்த ஆய்வின் முதல் குழுவில் உள்ள தம்பதிகள், கரு த்தரிக்க பல காலம் ஆகியிருப்பது தெரிய வந்தது. இதற் கு காரணமாக உடலினுள் தேங்கிய அதிகப்படியான கொழுப்புக்கள் தான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
கொழுப்புக்கள்

உடலில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகமாக இரு க்கும்போது, இனப்பெருக்க ஹார்மோன்களின் இய க்கம் பாதிக்கப்பட்டு, கருத்தரிப்பதில் பல இடையூ றுகளை சந்திக்கவேண்டியிருக்கும். இதன் காரண மாகத்தான் குண்டான தம்பதிகளால் விரைவில் குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை என்று ம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்தனர்.
 
=>  மஹா லஷ்மி எஸ்.

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: