உங்கள் முக அழகுக்கு அழகு சேர்க்க உதவும் கனித் தோல்கள்!
உங்கள் முக அழகுக்கு அழகு சேர்க்க உதவும் கனித் தோல்கள்!
உங்கள் முக அழகுக்கு அழகு சேர்க்கக் கூடிய இயற்கையான கிடைக்கக் கூடிய கனிகள் அதாவது
பழங்களின் தோல்கள் பற்றி இங்கு காணவிருக் கிறோம்.
ஆரெஞ்சு பழத்தோல்
ஆரஞ்சுபழத்தின் தோலில் வளமானஅளவில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளது. இவை சருமத்தின் ஆரோக்கியத்தி ற்கு தேவையானவை. அதில் வைட்டமின் சி சருமத்தின் நிறத் தை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள சுருக்கங்க ள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறையவைக்கும். மேலும் முகப்பரு வில் இருந்தும் விடுவிக்கும்.
வாழைப்பழத் தோல்
வாழைப்பழத்தின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது சரும செல்களுக்கு ஏற்படும் அழுத்தத் தைக் குறைக்கும் மற்றும் புறஊதாக் கதிர்களி டமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.
மாதுளை பழத் தோல்
மாதுளையின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏரா ளமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீங்கி, முதுமைத் தோற்ற த்தைத் தடுத்து, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும்.
எலுமிச்சை பழத் தோல்
எலுமிச்சையின் தோலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், அது சருமத் தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் ஆசிட், சரும பொலிவை அதிகரிக்கும்.
ஆப்பிள் பழத் தோல்
ஆப்பிளின் தோலில் பாலிஃபீனால்கள் ஏராளமாக உள்ளதா ல், அது ப்ரீ- ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் சரும செல்களைப் புதுப் பிக்கும்.
பப்பாளி பழத் தோல்
பப்பாளியின் தோலில் ஆல்பா ஹைட்ராக்ஸி பொருள் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க வல் லது. மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் நீக்கவல்லது.
*
=> பா. தமிழ்
கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்