Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!!

பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!!

பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!!

இந்திய குடும்ப நலநீதிமன்றததில் விவாகரத்து கேட்டு தொடுக்கும் வழ க்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள்

அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அப்படி தொடரப்பட்ட பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்! என்ற தலை ப்பில் இங்கே காணவிருக்கிறீர்கள்.

பொதுவாக இந்து திருமணச்சட்டம், கிறிஸ்தவ விவாகரத்துசட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம்  ஆகியவற்றின் கீழ் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.

Naveen Kohli Vs Neelu Kohli (AIR 2006 SC 1675)

ஒரு நிறுவனத்தில் 94.5 சதவிகிதம் பங்கு வைத்திருக்கும் ஒரு மனைவி அந்நிறுவனத்தில் ஒரு ஊழியராக பணி செய்யும் கணவர் மீது, ‘கம்பெனி  விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு நஷ்டம் ஏற்படுவதால் அவருடன் கம் பெனி சார்பில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்று நாளிதழில்  அறிவிப்பு வெளியிட்டதை மேற்கோள் காட்டி, ‘மனதளவிலான கொடு மை’ என்று அக்கணவர், மனைவி மீது விவாகரத்து மனு தாக்கல் செய் தார்.  இதன் தீர்ப்பில் தாம்பத்யத்தில் கணவனோ மனைவியோ சுயநலமா கவோ, கஞ்சத்தனமாகவோ, வெறுப்பூட்டும் வகையிலோ அல்லது சிறு கோபத்தின்  வெளிப்பாடாக சிறுமையுடன் நடந்து கொள்வது, திருமண உறவு நீர்த்துவிட்டதைக் காட்டுகிறதே தவிர, ‘மனக்கொடுமை’ என்று கூற இயலாது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த மனைவி வீம்புக்காகவே தொடர முடி யாத திருமண உறவை தொடர நினைப்பது யாருக்கும் எந்த பயனையும்  தரப் போவதில்லை என்று கூறி விவாகரத்து வழங்கியது. இத்தீர்ப்பின் அடிப்படையே, ‘முறிந்து மீள முடியாத திருமண பந்தத்தைத் தொடர  இய லாத நிலை’யையும் விவாகரத்துக்கு அடிப்படைக் காரணமாக கொண்டு வர, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய காரணமாக அமைந்த து.  அந்த மசோதா இன்னும் நிலுவையிலேயே உள்ளது.


Kamaleshwar Bai Vs Peelu Ram Sahi

மனைவி தனக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, வரதட்சணைக் கொடு மை போன்றவற்றுக்காக சட்டப்படி புகார் கொடுப்பதை விவாகரத்துக்கா ன  மனக்கொடுமை என்ற அடிப்படைக் காரணமாக ஏற்றுக்கொள்ள இயலாது என்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறுகிறது.


Usharani Lenka Vs Panigrahi Subash Chandra Dash

கணவன், தன் மனைவி மீது தங்கள் திருமணத்துக்கு முன்னர் யார் மூல மாகவோ கருவுற்று கருக்கலைப்பு செய்ததாகவும், அதனால் திருமணம்  செல்லாது என்று கூறும் ஒரு வழக்கு… மேலும், தன் மனைவி தொடர்ந்து பல ஆண்டு காலம் தன்னுடன் எந்தவித திருமண உறவிலும் ஈடுபடாதது  விவாகரத்துக்கான மனக்கொடுமை என்ற அடிப்படைக் காரணமாகவும் காட்டி விவாகரத்துக்கான ஒரு வழக்கும் தாக்கல் செய்தார். வழக்கின் தீர்ப்பில்  எந்த முகாந்திரமோ, சாட்சியமோ இல்லாமல் ஒரு பெண்ணின் மீது அவதூறு கூறுவது தவறு என்ற கண்டனத்தை பதிவு செய்தது.

ஆனால், ‘தாம்பத்ய உறவு மறுக்கப்பட்டது மனக்கொடுமைதான்’ என்ப தை ஏற்று, மனைவியின் வாழ்வாதாரத்துக்கு நிதி நிவாரணம் அளித்து  தீர்ப்பளிக்கப்பட்டது. தகுந்த காரணம் இன்றி பிரிந்து செல்லுதல்… குறிப் பிட்ட காலம் வரை இணையாமல் இருத்தல் கணவனோ, மனைவியோ தகுந்த  காரணமில்லாமல் மனைவியையோ, கணவரையோ விட்டுப் பிரி ந்து செல்லுதல். இவ்வாறு பிரிந்து செல்லும் நபர் திருமண உறவில் தனக் கு இருக்கும்  சட்டப்படியும் தர்மப் படியுமான கடமையிலிருந்து தவறுவது ஆகும். ஒருவேளை பிரிந்து இருப்பதற்கான தகுந்த காரணத்தை எதிராளி காண்பிக்கும்  வேளையில், இந்தப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் விவாகரத்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்படலாம்.


Vikas sharma  Vs Anita Sharma

திருமணமான பெண் கணவருடன் இணைந்து வசிக்க விரும்பினாலும், கணவர் இல்லாமல் அவரின் பெற்றோருடன் வசிக்க விரும்பாதது சட்டப் படி  இணையாமல் இருத்தல் என்று கூற முடியாது என்று இவ்வழக்கில் தீர்பபளிக்கப்பட்டது. திருமணம் செய்து கொள்ளும்போது இருக்கும் மதத் தை மாற்றி  வேறு மதம் ஏற்றுக் கொள்ளுதல் ஆணோ, பெண்ணோ தான் திருமணம் செய்து கொள்ளும்போது பின்பற்றிய மதத்திலிருந்து, அந்தத் திருமணம்  நிலுவையிலிருக்கும் போதே வேறு மதத்துக்கு மாறுவதால், ஒரு வேளை அந்தத் திருமண உறவில் சிக்கல் ஏற்பட்டால், இக்காரணத் துக்காகவும்  விவாகரத்து கோரலாம். இந்த அடிப்படைக் காரணம் சிறப்பு த் திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிக்கு பொருந்தாது.

மனநலப் பாதிப்பு… மனநலம் சம்பந்தப்பட்ட நோய் சிறு கோபமோ, மன அழுத்தமோ மனநலப் பாதிப்பு அல்ல. தொடர்ந்து கட்டுக்கு அடங்காமல்,  தன்னையும் அறியாமல் செய்யும் செயல்கள் மருத்துவ ரீதியாக மனநலப் பாதிப்பு என்று சான்று அளிக்கப்படக்கூடியவை இதன் கீழ் அடங்கும்.


Hema Reddy  Vs  Rakesh Reddy

மனைவியின் தொடர் அமைதி அல்லது அவரின் கணவரின் குடும்பத்தா ருடன் நல்லமுறையில் பழகாதது அல்லது கையைக்கொண்டு தலையை  சொரிந்து கொண்டிருக்கும் விதம் போன்றவற்றை மனநலப் பாதிப்பு என் று கூற இயலாது. மேலும் இந்த வழக்கில் அந்தப் பெண் தன் தாயார் தவறிய  காரணத்தினால் சிறிது காலம் கவலையில் இருந்தார். இந்நிலை யை மனநோய் என்று கூற இயலாது.  இதற்காக விவாகரத்து கொடுப்பது இயலாது.

தொழுநோய் கொடிய தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் துணையு டன் தொடர்ந்து திருமண உறவை தொடர விருப்பம் இல்லாவிட்டால், அத ற்கான  போதிய மருத்துவ சான்றிதழ்களோடு விவாகரத்து கோரலாம்.


Swarajya Lakshmi Vs G.G.Padma Rao

திருமணத்தைத் தொடர்ந்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்ட பிறகு தன் மனைவிக்கு தொழுநோயும் காசநோயும் இருப்பதற்கான போதிய மருத்துவ  சான்றிதழ் பெற்று, தொடர்ந்து அந்த மனைவியுடன் வாழ்வது தனக்கும் குழந்தைக்கும் ஆபத்தும் நோய் தொற்றிக்கொள்ளும் அபாயமு ம் இருப்பதால்  விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட கணவனி ன் மனு, மனிதாபிமான அடிப்படையில் கீழமை நீதிமன்றங்களில் விவாக ரத்துக்கு  மறுக்கப்பட்டாலும், மேல் முறையீட்டில், இவ்வாறு இருக்கும் நோயாளிகளுடன் தொடர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடகட்டாயப்படுத்த முடியாது என்று  விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

=> குங்குமம் தோழி சாஹா

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: