நீங்கள் வாங்கும் அல்லது வாங்கிய சொத்து எந்த வகையை சார்ந்தது? – சட்ட விழிப்புணர்வு பதிவு
நீங்கள் வாங்கும் அல்லது வாங்கிய சொத்து எந்த வகையை சார்ந்தது? – சட்ட விழிப்புணர்வு பதிவு
பொதுவாக சொத்து வாங்கும் அனைவரும் பத்திரம், பட்டா என சொத்து தொடர்பான
ஆவண சரிபார்ப்புக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பார்க ள். அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் அந்தசொத்தை வாங்குவதற்கு முனைப்புகாட்டுவார்கள்.
சொத்து வாங்கும் அனைவரும் பத்திரம், பட்டா என சொத்து தொடர்பான ஆவண சரிபார்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் கள். அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத் தில் அந்த சொத்தை வாங்குவதற்கு முனைப்பு காட்டுவார் கள். சொத்துக்கான பத்திரம், பட்டா சரியாக இருந்தாலும் அந்த சொத்து விற்பனை செய்பவருக்கு எந்தவகையில் வந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பாகப்பிரிவினை
அந்த ஆவணங்களை நன்றாக படித்து பார்த்துவிட்டு அதி ல் வேறு ஏதேனும் வில்லங்கங்கள் இருக்கும் வகையி லான வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியது முக்கியம். ஏனெனி ல் சொத்தை விற்பனை செய்பவருக்கு அது அவருடைய சுயசம்பாத்திய சொத்தாக இருந்தால் பிரச்சனை இல்லை . ஆனால் அதைவிடுத்து அவருக்குவேறு வகையில் சொத்து வந்திருந்தா ல் அதில் இருக்கும் விவரங்களை கூர்ந்து படித்து இறுதி செய்வது நல்லது.
அதிலும் பாகப்பிரிவினை மூலம் சொத்து வந்திருந் தால் முறைப்படி பாகப்பிரிவினை செய்யப்பட்டிருக் கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும். சில இடங் களில் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் பாகப்பிரிவினை செய்திருப்பார்கள். ஆனால் தனித்தனியாக அவரவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்திருக்க மாட்டார்கள். ஒருவேளை உங்களு க்கு விற்பனை செய்பவர் மட்டும் பத்திரப்பதிவு செய்து இருக்க லாம்.
பத்திரப்பதிவு
அப்படி இருக்கும்பட்சத்தில் அதில்இருக்கும் விவரங்கள் அனை த்தும் சரியாக குறிக்கப்பட்டிருக்கிறதா? என்று பார்க்கவேண்டும். இடத்தின் 4 பக்கங்களிலும் என்னென்ன இருக்கிறது என்ப துடன் அந்த இடத்தின் பரப்பளவு சரியாக இருக்கிறதா? என் பதை சர்வேயர் மூலம் உறுதி செய்து கொள்வது அவசியம்.
ஏனெனில் சொத்தை விற்பனை செய்பவருடைய குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் தங்கள் பாகப்பிரிவினை இடத்தை பத்திரப் பதிவு செய்யும்போது இட அளவுகள் சரியாக இருந்து வில்லங்கம் ஏற்படாமல் இருந்தால் பிரச்சனை இல்லை. அதுபோல் சொத்தை விற்பனை செய்பவர் தன்னுடைய பெயருக்கு பட்டா உட்பிரிவு செய்து இருக்கிறாரா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பட்டா பெயர் மாற்றம்
அவர் பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் பத்திர ப்பதிவு மட்டும் செய்திருக்கும் பட்சத்தில் அந்த சொத்துக்கான பட்டா அவருடைய குடும்பத்தினர் பெயரில்தான் இருக் கும். அதை அவருடை ய பெயருக்கு மாற்றிய பிறகு தான் நீங்கள் உங்கள் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அவர் சொத்தை விற்கும் அவசரத்தில் உங்களுக்கு பத்திரப்பதிவு மட்டும் செய்து கொடுத்துவிட்டால் பின்னர் பட்டாவுக்கு அவரை தேடி அலைய வேண்டியிருக்கும்.
அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு உடனடியாக நடவடி க்கை எடுத்தால் பிரச்சினை இல்லை. எனவே வாங்கும் சொத்தின் பத்திரம், பட்டா போன்ற ஆவணங்கள் அவர்பெயரில் இருப்ப தை உறுதிபடுத்திக்கொள்வது அவசியம்.
நிபந்தனைகள்
அதேபோல் சொத்தை விற்பனை செய்பவருக்கு அந்த சொத்து தானப்பத்திரம்மூலம் வழங்கப்பட்டிருக்கலாம். அவருக்கு அந்த சொத்தை தானமாக கொடுத்தவர் யார்? என்பதை தெரிந்துகொள்வதுடன் அவருடைய முழுசம்ம தத்துடன்தான் சொத்து எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக சொத்தை எழுதிகொடுத்தவர் ஏதேனும் நிபந்தனைகள் எதுவும் குறிப்பிட்டிருக்கிறாரா? என்பதை சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
ஏனெனில் சொத்தை தானமாக கொடுத்தவர் வாழ்நாள் மூலம் அதை தானமாக பெற்றவர் அனுபவிக்க மட்டுமே முடியும் என்று குறிப்பிட்டிருக்கலாம். அதுபோல் வேறுஏதேனும் நிபந்தனை கள் குறிப்பிட்டிருந்தாலும் அப்படிப்பட்ட சொத்தை வாங்குவது சிக்கலை உருவாக்கிவிடும். அதுபோல் தான– செட்டில்மெண் ட் மூலமும் ஒருவருக்கு சொத்து கிடைத்திருக்கலாம்.
சொத்தின் வகை
அது அவருடைய குடும்ப உறவுகளிடமிருந்து அல்லாமல் வேறொருவர் மூலமாக பெற்றிருக்கலாம். ஒருவருக்கு சொத்து எப்படி வந்திருந்தாலும் அதில் வில்லங்கம், நிபந்த னைகள் ஏதும் இருக்கிறதா? என்பதை தெளிவு படு த்திக் கொள்வது நல்லது. அதேபோல நீங்கள் வாங் கும் சொத்து மைனருடைய சொத்தாக இருப்பதற்கு
வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய சொத்தை நீதிமன் றம் நியமிக்கும் காப்பாளர் அனுமதி பெற்றுதான் விற் பனை செய்ய முடியும். எனவே வாங்கும் சொத்து எந்த வகையை சார்ந்தது என்பதையும் தெளிவுபடுத் திக்கொண்டு இறுதி முடிவு எடுப்பது நல்லது.
=> தூதுவன்