Tuesday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! -உணவு ஆலோசகர்

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! – உணவு ஆலோசகர்

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! – உணவு ஆலோசகர்

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னைகள் வராமல் தடுக்க என்னென்ன

சாப்பிடலாம் என்று உணவுஆலோசகர் தரும்குறிப்புகள் இதோ.. குண்டாக இருப்பது, தொடரும் ரத்த சோகை, அடுத்தடுத்து பிரசவம், சத்தில்லா உணவு உட்கொள்வது என பல காரணங்களால் பெண்களுக்கு மாத விலக்கு சமயத்தில் தொல்லைகள் ஏற்படுகி றது.

ஹார்மோன் சுரப்பியில் ஏற்படும் மாற்றங்களால் முறையற்ற மாதவிலக்கு, அதிக ரத்தப்போக்கு, சோர்வு ஏற்படும். இதுபோல் பிரச்சினை உள்ளவர்களுக்கு எடை குறைந்த குழந்தைகள் பிறக்கவாய்ப்புள்ளது. சிறு வயது முதல் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டு ம். உடற்பயிற்சி, புரதம் மற்றும் இரும்புச் சத்து, அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளும் எடுத் துக் கொள்ள வேண்டும்.

முருங்கைக் கீரை, ராகி, முளைகட்டிய பயறு வகைகள், முழு கோதுமை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், பாதாம், முந்திரி, உலர் திராட்சை, ஆட்டு ஈரல், மீன், முட்டை ஆகிவற்றை தினமும் உணவில் சேர்க்கவேண்டும். பேரீச்சை மாதுளை, கொள்ளு, அவல், பெரியநெல்லி, பனை வெல்லம் ஆகியவ ற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்தால், மாத விலக்கு பிரச்சினையை ஓரளவு தடுக்க முடியும்.
*

*
=> ஹேமா

இந்த இணையம் இலவசமாக தொடர கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply