இளையராஜா Vs. S.P. பாலசுப்ரமணியம்
இளையராஜா Vs. S.P. பாலசுப்ரமணியம்
இசைஞானி இளைய ராஜாவுக்கு பாடும் நிலா எஸ்.பி.பி. இடையே தற்காலிக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இக்கருத்து
வேறுபாடுநீங்கிட உங்கள் நண்பன் விதைவிருட்சம் சத்தியமூர்த்தி ஆகிய நான் எழுதிய புதுக்கவிதை இது. பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க
*
இசை வானில் ஒரு
இளைய நிலா நம்
இளைய ராஜா – அவரது
இதம் தரும்
இசையால்
இதயம்
இனித்தது.
இளையராஜாவின்
இன்றைய முடிவால்
இனிதான இசைக்கு
இன்று வந்ததோ சோதனை
பாடும் நிலா பாலுவின்
பா(Ba)வமுள்ள வார்த்தைகளால்
விண்ணைத் தாண்டி
விரிந்தன ராஜாஇசையின் சிறகுகள்
நட்புக்கு இலக்கணமாக
நாமறிந்த நண்பர்கள் இவர்களிருவரும்
இடையில் புகுந்து குழப்பத்தையும்
இடர்பாடுகளையும் உண்டாக்கிய
நயவஞ்சக நெஞ்சத்தை
நாசுக்காக அறிந்து
நாடறிய தூக்கியெறிந்து
நட்புக்கு இலக்கணம் சேர்த்து
இசைக்கு இதமளிக்கும் செய்தியாக நம்
இசைதேவனின் அறிவிப்பு நம்
இருசெவிகளும் கேட்கும் நாள்
இல்லை. . . வெகுதூரத்தில்
விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க