Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிஸ்தாவை 'இவற்றுடன்' கலந்து சாப்பிட்டு வந்தால்_-ஹார்மோன்களின் எழுச்சிக்கு_

பிஸ்தாவை ‘இவற்றுடன்’ கலந்து சாப்பிட்டு வந்தால் . . . – ஹார்மோன்களின் எழுச்சிக்கு . . .

பிஸ்தாவை ‘இவற்றுடன்’ கலந்து சாப்பிட்டு வந்தால் . . . – ஹார்மோன்களின் எழுச்சிக்கு . . .

இளமையும், ஆரோக்கியமும் இருக்கும்வரையே நம்மால் புத்துணர்ச்சி யாக

இருக்க முடிகிறது. அதேநேரம் முதுமையின் ஆரம்பக் கட் டத்தை நெருங்கும்பொழுதும், நோய்வாய்படும்பொழுது ம் புத்துணர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. இளமைக்காலத் தில் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்த உடலானது முதுமையை நெருங்கும்பொழுது செல்களின் பலமுறை பெருக்கம் குறைந்து, செல் அழிவை சந்திக்க நேரிடுகிறது.

இதனால் தோல் சுருங்குதல், சதை வற்றுதல், ஐம்பொறிகளின் பலன் குன் றுதல், முதுமைகாலநோய்களின் ஆதிக்கம், நோய் எதிர்ப் பு சக்தி குறைவு போன்ற பல தொல்லைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பல வகையான நோய்களால் உடல் பாதிக்கப்படும் பொழுது செல்களின் ஆற்றல் குறை ந்து ஒருவித பலஹீனம் ஏற்படுகிறது. இந்த பலஹீனத்தி னாலும் புத்துணர்ச்சி மறைந்து ஒரு விதமான சோர்வு நம்மை ஆட்கொள் கிறது.

உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உண் டாக்குவதில் ஹார்மோன்கள் பெரும் பங்கை வகிக்கின் றன. இந்த ஹார்மோன்களில் சுரக்கும் நாளமில்லா சுரப் பிகள் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்யும் அத்தியாவசிய உறுப்புகளாக கருதப்படுகின்றன. இந்த உறுப்புகள் தங் கள் சுரப்பை அதிகப்படுத்தும் பொழுதும், குறைக்கும்பொ ழுதும் உடலில் பலவித குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மருத்துவ உல கிற்கு சவாலாகவும், பலவித ஆச்சர்யங்களை ஏற்படுத்து வதாகவும் உள்ளது.

நமது உடலின் உறுப்புகள் செயலிழந்தால் அவற்றை மாற்றி பிறரின் உறுப்புகளை அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்துவதுபோல் நாளமில்லா சுரப்பிகளை மாற்றம் செய்யும்படியான மருத்துவவிஞ்ஞான வளர்ச் சி இன்னும் ஏற்படவில்லை என்பதே உண்மை. ஹார் மோன்களின் செயல்பாடானது செல்வளர்ச்சியை சீராக்கவும், செல் முதிர் ச்சியை கட்டுப்படுத்தவும், செல் அழிவை  தடுக்கவும் பயன்படுவதாக கண்டறியப்பட் டுள்ளது. அதிலும் குறிப்பாக இனப் பெருக்க உறுப்புகளை கட்டுப்படுத்தும் ஹார்மோன் கள் ஒரு மனிதனை நாள் முழுவதும் புத்து ணர்ச்சியுடன் வைத்திருப் பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க ஹார்மோன்கள் முது மையை கட்டுப்படுத்துகின்றன. டெஸ்டோஸ்டீரோன்கள் குறைபாட்டால் ஆண்க ளுக்கு மலட்டுத் தன்மையும், அலித் தன்மையும், தோல் சுருக்கம், தோல் வறட்சி மற்றும் ஒருவித பல ஹீனமும் உண்டாகின்றது. அதேபோல் ஈஸ்ட்ரோஜ ன்குறைபாட்டால் பெண்களுக்கு விரைவில் மெனோ பாஸ் ஏற்படுகிறது. ஆண் களுக்கு வளர்வது போன்ற ரோமங்களும், சதை தொங்குதல், முடிஉதிர்தல் போ ன்ற முதுமையின் குணங்களும் தோன்றுகின்றன. இந்த ஹார்மோன்க ளை சுரக்கக்கூடிய இனப்பெருக்கம் சார்ந்த நாளமில் லா சுரப்பிகளும், இவற்றை கட்டுப்படுத்தும் பிட்யூட்ட ரி என்னும் நாளமில்லாசுரப்பியும் தங்கள் பணியில் தொய்வடைவதால் விரைவில் முதுமை ஏற்படுவதுட ன் பாலுறவில் ஆர்வக்குறைவும் தோன்றுகிறது.

தாம்பத்ய உறவில் மிதமாக ஈடுபடுபவர்களுக்கு இதயக்கோளாறு, இரத்த க்கொதிப்பு மற்றும் அதிக இரத்த உறைவு நோய்கள் ஏற்ப டும்வாய்ப்பு குறைவாக உள்ளதாக சமூகவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாலுறவில் ஈடுபடவாய்ப்பில் லாத மற்றும் பாலுறவு துணை இல்லாத ஆண்களும், பெண்களும் விரைவில் மனநோய்க்கு ஆளாகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை யே.

ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற்தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தரும் அற்புத மூலிகைதான் பிஸ்தா. பிஸ்டே சியாவீரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனகார்டியேசியே என்ற குடும்பத்தைச் சார் ந்த இந்த சிறு மரங்களின் உலர்ந்த பழ பருப்புகளே பிஸ்தா பருப்பு என்று அழைக்கப்படுகின்றன.

பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின்  சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன. பிஸ்தா பருப்பை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் 1 முறை சாப்பிட தேகம் ஆரோக்கியமடைவதுடன் பாலுறுப்புகள் வலுவடைகின்ற ன. பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, 1 அல்லது 2 தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பு உண்டாகும். பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப் பை பாலுடன் வேக வைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப் பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடா ன பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.

=> மகிழ்திருமேனி

இந்த இணையம் இலவசமாக தொடர கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: