Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்ப காலத்தில், பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு,

கர்ப்ப காலத்தில்… பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு…

கர்ப்ப காலத்தில்… பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு…

கர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட சில எளிய தந்திரங்கள்!!!
பெண்களுக்கே கிடைக்கும் ஒரு மிகப் பெரிய பாக்கியம் எது என்றால் அது தாய்மைதான். அந்த தாய்மையை

ஒருபெண் அடையும்பொழுது, அவளது மனதிலும், உடலிலும் எண்ணற்ற மாறுதல்கள் ஏற்படுகின்ற ன. அத்தனையையும் தாங்கி இவ்வுலகிற்கு ஒரு உயிரை கொண்டு வருகின்றாள். கர்ப்பகாலத்தில், ஒரு பெண்ணிற்கு பல்வேறு சங்கடங்கள் உண்டா கின்றன. அவற்றில் தூக்கமின்மையும் ஒன்று.

கர்ப்ப காலத்தில் காணப்படும் நித்திரையின்மை, ஒரு சங்கடமான பிரச்சனை என்றாலும், பொது வாக இது எல்லா பெண்களிடமும் காணப்படுகின் றது. ஒருமகவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு அம்மா இந்தபிரச்சினையை எவ்வாறு சமாளிக்கி ன்றார் என உங்களுக்குத் தெரியு மா?

இந்த தூக்க குறைபாடு ஏற்பட பல்வேறு காரண ங்கள் உள்ளன. ஒவ்வொரு காரணமும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. எனவே அந்த காரண ங்கள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறைக ளைக்கையாண்டு தூக்கமின்மை நோயை குண ப்படுத்த வேண்டும்.
 
தூக்கமின்மை

தூக்கமின்மை, ஜெட் லேக் அல்லது பணி நேரம் மாற்றம் போன்றவற்றால் சில சமயம் ஏற்படலாம். இது உடல் வலி அல்லது வயிற்றுக் கோளாறு (GERD) போன்றவற்றால் கூட தூண்டப்படலாம். அவ்வாறு தூண்டப்பட்டால் ஒரு சிலருக்கு தன்னிச்சையான வாந்தி ஏற்படலாம், அல்லது அவர் வேகமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடலாம்.
 
வேறு காரணங்கள்

கெட்ட கனவுகள் மற்றும் தூக்கத்தில் நடக்கும் வியாதி போன்றவையும்கூட தூக்கமின்மை வர காரணமாகலா ம். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பித்து அல்லது போபியா போன்ற மனநோய்கள் உருவாகலா ம். மருந்து எடுத்துக்கொள்ளுதல், உடல் வறட் சி மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற வெளிப்புற காரணிகள் கூட தூக்கமின்மையை தூண்டலாம்.
 
குழந்தையும் ஓர் காரணம்

கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை வருவதற்கு ஏக ப்பட்ட காரணங்கள் உள்ளன. அவ்வாறு வருவ தற்கு குழந்தையும் கூட ஒரு காரணமாக இருக் கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஒரு கர்ப்பிணி தாய் கருவுற்ற பிந்தைய கால கட்டங்களில், கரு நன்கு வளர்ந் து விடுவதால் அவரது வயிற்றின் அளவு அதிகரிக்கு ம். அவ்வாறு ஏற்படும் சங்கடங்கள் கூட தூக்கமின் மை வர காரணமாக இருக்கலாம்.
 
குழந்தையின் எடை

ஒருசில தாய்மார்களுக்கு குழந்தையின் அதிக எடை காரணமாக முதுகு வலிவரும். அவ்வாறு உண்டாகும் முதுகு வலியானது அந்த தாய்க்கு தூக்கமில்லாத இரவுகளை நிச்சயம் பரிசளிக்கும். குழந்தையின் அதிக எடையானது தாயின் சிறுநீர் ப்பை மீது ஒரு அழு த்தத்தை உருவாக்கும். அதன் காரணமாக அந்த தாய்க்கு இரவு முழுவதும் அடிக் கடி சிறுநீர் வரும். இதன் காரணமாக அத்தாயால் கண்டிப்பாக இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க இயலாது.
 
கர்ப்ப கால கவலைகள்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கவலைகள் கண்டி ப்பாக தூக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், ஒரு தீய சுழற்சியையும் ஏற்படுத்துகின்றது. மேலும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்துவதால் ஒரு தாய் இயற்கையாகவே அடிக்கடி இரவில் விழித்து இருப்பாள்.

எப்படி சமாளிப்பது?

ஒரு தாய் தன் தூக்கமின்மைப் பற்றி கவலைப்ப ட்டால் அது அவளது குழந்தையையும் கண்டிப்பா க பாதிக்கக்கூடும். இந்தப் பதற்றம் தூக்கமின்மை யை மேலும்அதிகரிக்கும். எனவே கர்ப்பிணி பெண் கள் கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை எவ்வாறு சமா ளிக்க முடியும்?. கருவின் எடை காரணமாக உங்க ளுடைய வயிற்றின் அளவு, வடிவம் மற்றும் எடை, உங்களை கட்டாயம் கஷ்டப்படுத்தும். எனவே நீங்கள் புதிய நிலை களில் தூங்க முயற்சிசெய்வீர்கள். அது உங்க ளுக்கு கட்டாய முதுகு வலியைத் தரும்.

டிப்ஸ் 1

கர்ப்பிணிகள் இடது பக்கமாக தூங்குவதோடு, ஒரு குஷன் அல்லது மென் மையான பொருள் எதையாவது உங்களுடைய வயிற்றுக்குகீழ் வைத் துக்கொண்டு தூங்க முயற்சி செய்யலாம்.

டிப்ஸ் 2

தூங்க முயற்சிக்கும் முன் சூடான வெந்நீரில் குளியல் போடுவது உங்களுடைய அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தைப் பரிசளிக்கும்.

டிப்ஸ் 3

நல்ல மனதுக்கு பிடித்த இசை இங்கே சில நன்மை களைத் தருகின்றது. இயற்கையான ஒலிகளான பறவைகளின் ரீங்காரங்கள் அல்லது கரையில் மோதும் கடலின் ஒலி போன்றவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.
 
டிப்ஸ் 4

இரவுநேரங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு களை குறைந்தளவு எடுத்துக்கொள்வது, உங்கள் மூளை அதிகளவில் செரோட்டி னை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும். செரோட்டின் ஆனது நீங்கள் நன்றாக தூங்க உங்களுக்கு துணை புரியும்.

எனவே, கர்ப்ப காலத்தில்… பெண்கள் நிம்மதியாக தூங் குவதற்கு… முயற்சி செய்து நன்கு தூங்குங்கள். .
 
=> பத்ரி கிருஷ்ணன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: