Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மஞ்சள் தூளுடன் மிளகுத்தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால்

மஞ்சள் தூளுடன் மிளகுத் தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் . . .

மஞ்சள் தூளுடன் மிளகுத் தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் . . .

சமைக்கும்போது சாம்பாரில் கலக்க உபயோகப்படும் மஞ்சளின் மகத்துவ ங்களில்

ஒன்றினை இங்கு காண்போம்.

மஞ்சள் தூளுடன் மிளகுத் தூளை சேர்த்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நமக்கு தொல்லை கொடுத்து வரும் ஏராளமான உடல்நல பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். ஏனெனில் இந்த கலவையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்
> சுத்தமான மலைத் தேன் – 100 கிராம்
> மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
> மிளகுத் தூள் – 1 சிட்டிகை
> எலுமிச்சை தோல் – 1 டீஸ்பூன்
> ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை

முதலில் 1பாத்திரத்தில் மஞ்சள்தூள், மிளகு தூள் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்குகலந்து கொள்ளவேண்டும். பின் அதனுடன் எலுமிச்சை தோல் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, 1 கண்ணாடி பாட்டிலில் போட் டு அதை நன்கு மூடி, 2 வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் பயன்படுத்த வேண்டும்.

குடிக்கும் முறை

சளி, காய்ச்சல் போன்றவை அதிகமாக இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று தொடர்ந்து மூன்று நாட்களும் 1/2 டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.

நன்மைகள்

தினமும் இதில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், அடிக்கடி உடலி னுள் ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து, நோயெ திர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

சுவாசப் பிரச்சனைகளான ஆஸ்துமா, நுரையீரல், மூச்சு க்குழாய் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், தினமும் மூன்று வேளை இந்த கலவையில் 1/2 டீஸ்பூன் சாப்பிடுவது மிகவும் நல்லது.

மஞ்சளை உணவுசாப்பிடுவதற்குமுன் எடுத்துக்கொள்வதால், தொண்டை மற்றும் நுரையீரலுக்கு நல்லது. அதுவே சாப்பிடும்போது எடுத் தால், செரிமான மண்டலத்திற்கும், உணவு சாப்பிட்ட பின் எடு த்தால், குடல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.

எச்சரிக்கை

பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை எடுக்கக் கூடாது. ஏனெனில் அது பித்தப்பை தசைகளைச் சுருங்கச் செய்து, குறைவான ரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படு த்திவிடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: