Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குல தெய்வத்தை வசியப்படுத்தி முழு அருளையும் பெறுவது எப்படி?

குல தெய்வத்தை வசியப்படுத்தி… முழு அருளையும் பெறுவது எப்படி?

குல தெய்வத்தை வசியப்படுத்தி முழு அருளையும் பெறுவது எப்படி?

குல தெய்வம் வசியம் செய்ய ஒரு பௌர்ணமி நாளில் கரு மஞ்சள் செடிக்கு காப்பு கட்டி அந்த மஞ்சளை எடுத்து அரைத்து அதனுடன்… 

ஜவ்வாது, அத்தர், அரகஜா, புனுகு, ஜாதி க்காய், ஜாதி பத்திரி, வெட்டிவேர், பச்சை கற்பூரம்

அதனுடன் சித்தாமணக்கு எண்ணெய்விட்டு பதம்வரும் வரைக்கும் நன்றாக 2 ஜாமம் வரை க்கும் அரைக்க வேண்டும். இந்த மையை காந்தம் ஒட்டாத டப்பியில் பதனம் செய்து வைக்க வேண்டும் பூஜையின் போது குல தெய்வத்திற்கு ஒரு வாழை இலை போட்டு அதன் மேல் ஒரு செப்பு தகடு வைத்து அதன் மேல் கருப்பு மஞ்சள் மூன்று எடுத்து வைத்து அதில் மேற்கண்ட அஞ்சனத்தை மஞ்சள் மேல் தடவி பூஜைக்கு தேவையான படையலை படைத்து கொண்டு மந்திரம் ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும்
.
குல தெய்வ வசிய மந்திரம்

ஓம் ஸ்ரீம் அம் உம் வம் லம் சிங்
ஐயும் கிலியும் சவ்வும் ஜம் ஜம்
பம் யம் ரம் மஹா (குலதெய்வத்தின் பெயர் )
சர்வ தனமே சர்வ ஜனமே வா வா வசி வசி ஹூம்பட் நமக .

குல தெய்வம் வசியம் செய்ய ஞாயிற்றுக்கிழமை உகந்தது இதற்கு யந்திரங்கள் எதுவும் கிடையாது இந்த கருமஞ்சள் மற்றும் மேற்கண்ட அஞ்சனம் போதுமானது இதனால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் நெடுநாட்களாக நினைத்த காரியங்கள் நடக்காமல் தடைபட்டு வந்தால் குல தெய்வத்தின் அருளால் சகலமும் தடைகள் விலகி நல்ல வாழ்க்கை அமையும்

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறி ல்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்ப டுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடு கிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்து மாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வ ங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்ற ன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வர வேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்ன ல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

மேற்கண்ட அஞ்சனம் ,மற்றும் கருமஞ்சள் நம்முடைய நிலையத்தில் கிடைக்கும்.

Thanks to mantraayantraa

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: