Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

துணியை அயர்ன் (இஸ்திரி) செய்வது எப்ப‍டி?

துணியை அயர்ன் (இஸ்திரி) செய்வது எப்ப‍டி?

துணியை அயர்ன் (இஸ்திரி) செய்வது எப்ப‍டி?

நன்றாக அகண்ட நீண்ட‌ டேபிளில் இரண்டு முதல் நான்கு பழைய போர்வைகளை மடித்து அந்த

டேபிள் மீது போட வேண்டும் அதன்மேலே கிழிந்திடாத ஒரு போர்வை யை நான்கு மடிப்புகளாக மடித்து போட வேண்டும்.

அதன் நீங்கள் அயர்ன் செய்யும் துணியை எடுத்து விரித்து போட்டு அதன்மீது லேசாக தண்ணீர் தெளித்து ஒரு 5 விநாடிகள் அப்ப‍டியே விட வேண்டும்.

“த்ரீ பின் பிளக் உள்ள அயர்பாக்ஸ் பயன்படுத்துவதான் முழுமை யான பாதுகாப்பு.

துணி சூட்டை தாங்கும் அளவிற்கு அயர்ன் பாக்ஸில் உள்ள லெவல் ஸ்விட்சை அட்ஜஸ்ட் செய்து வைக்க வேண்டும். அதாவது சில துணி களை அயர்ன் செய்யும் போது குறைந்த சூட்டில் வைத்து அயர்ன் செய்ய வேண்டும். சில துணிகளை சற்று அதிக சூட்டில் வெப்பம் வைத்து அயர்ன் செய்யவேண்டும். இதன்மூலம் துணிகளும் ஆண்டு வரும். மின்சார‌ செலவும் குறைவாகும்.

முக்கிய துணிகளை அயர்ன் செய்தபிறகு, அயர்ன்பாக்ஸ் ஸ்விட்சை ஆஃப் செய்து விட்டு, அதில் இருக்கும் சூட்டில், கைகுட்டை, பனியன் போன்ற சிறு துணிகளை அயர்ன் செய்யலாம். இதன் மூலம் துணி களும் ஆண்டு வரும். மின்சார‌ செலவும் குறைவாகும்.

அதன் பிறகு ஒரு மூலையில் அயர்ன் பாக்ஸை நிமிர்த்து அதன் சூடு இருக்கும் தட்டையான பாகம் சுவற்றை நோக்கி வைக்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறை ஹீட்டிங் எலிமென்டை தகுந்த எலக்ட்ரீஷியன் மூலமாக கட்டாயம் மாற்ற வேண்டும்.

அயர்ன் பாக்ஸின் அடிப்பாகத்தில் பழுப்பு நிறமான கறை இருந்தா ல்… ஈரத் துணியை எடுத்து அதில் அதன் முனையில் சிறிது சோடா மாவை தொட்டுக் கறையின் மீது நன்கு தேய்த்தால் அந்த பழுப்பு கறை காணாமல் போய்விடும். அல்லது அந்த அயர்ன் பாக்ஸின் அடிப்பகுதியில் எண்ணெய் தடவி நிமிர்த்தி வைத்து “ஆன்’ செய்து சிறிது நேரத்திற்கு பின் “ஆப்’ செய்து ஈரத்துணியால் துடைத்தாலும் அந்த பழுப்பு கறை காணாமல் போய்விடும்.

==> விதைவிருட்சம் சத்தியமூர்த்தி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: