கொசுக்கள்… நோய் தடுக்கும் கொசுக்கள் குறித்து அரியதொரு ஆச்சரிய தகவல்!
கொசுக்கள் . . . நோய் தடுக்கும் கொசுக்கள் குறித்து அரியதொரு ஆச்சரிய தகவல்!
பொதுவாக கொசுக்கள் மூலமாகத்தான் டெங்கு உட்பட பல நோய்கள் மக்களிடம்
பரவி மரணத்தை ஏற்படுத்தி வருவது நீங்கள் அறிந்த விஷயம்தான். ஆனால் நோய் தடுக்கும் கொசுக்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? மேற்கொண்டு படியுங்க ள்
‘வோல்பாக்கியா’ கிருமியைச் சுமந்துச் செல்லும் ஆண் ‘ ஏடிஸ் எஜிப்டி’ கொசுக்களை பயன்படுத்தி டெங்கு பரவலைத் தடுக்க சிங்கப்பூரின் 3 பகுதிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு நல்ல முடிவையும் பயனுள்ள அரிய தகவல்களையும் அளித்து உள்ளது.
தெம்பனிஸ் வெஸ்ட் பகுதியில் இத்தகைய கொசுக்கள் விடப்பட்ட 3 மாதங்களுக்குப் பிறகு, அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை பாதி அளவு குறைந்துள்ளது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது.
விடப்பட்ட ‘வோல்பாக்கியா’ ஆண் ‘ஏடிஸ் எஜிப்டி’ கொசுக்கள் அங்குள்ள ‘ஏடிஸ்’ கொசுக்களுடன் வெற்றி கரமாக உறவு கொண்டது என இந்த ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
சிங்கப்பூரில் கொசுக்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாக கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் பிராடல் ஹைட்ஸில் சுமார் 3,000 ‘வோல்பாக்கியா’ கொசுக்கள் விடப்பட்டன.
*
– தமிழ்முரசு