ஒண்ணுமே புரியலை . . .
ஒண்ணுமே புரியலை . . .
2017 ஏப்ரல் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல… இந்தியாவிலேயே நடக்கிற பல விஷயங்கள் நமக்குப்
புரியவில்லை. ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்திக்க முடியாதபடி சில மாதங்களாய் சில நிகழ்வுகள் சித்தி ரை வெயிலைவிட நம்மை சித்ரவதை செய்கின்றன•
பன்னீரின் தியானம், சசியின் சபதம், தீபாவின் குழப்ப ம், மருத்துவமனை மர்மம், பீதியைக் கிளப்பிய பிரதமரின் பண நோட்டு விவகாரம், உ.பி. முதல்வரின் அதிர்ச்சியூட்டும் அதிரடிகள், விவசாயிகளின் போராட்டம், நெடுவாசல் நெருக்கடி.. இப்படி பலவிஷயங்களில் ஆரம்பமும் முடிவு ம் என்ன வென்றேப் புரிய வில்லை. சராசரி மனிதனுக்கு இவற்றால் நன்மை? தீமையா? என்பதும் தெரிய வில் லை.
312 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஒரு சாமியாரைத் தேடிப்பிடித்து முதல்வராக்கவேண்டிய அவசியம் என்ன? பதவியேற் ற பத்து நிமிடங்களுக்குள் இறைச்சிக் கூட மூடல்… அமைச்சர்களுக்கு அறிவுரை… அரசு அலுவலகங்களில் கெடுபிடி அமல்செய்யவேண்டிய அவசரம் என்ன? பணத்தை செல்லாமல் செய்தால் கறுப்புப்பணம் காணாமல் போகும் … தேசம் செழிக்கும்…. மக்கள் மகிழ்வார்கள் போன்ற வாக்குறுதிகளின்
நிலைஎன்ன? குறைந்த எண்ணி க்கை இருந் தாலும் கோவாவிலும் மணிப்பூரிலும் மணி மகுடம் சூடியது எப்படி? எவரக்கேனும் தெளி வான விடைதெரிந்தால் விவரமாய் தெரிவிக்க லாம்.
தனியொரு தொகுதிக்காக தமிழக ஆட்சியே முடங்கிப்போன அவலம் சரி தானா? முதல்வரே முகாமிடுவது முறை தானா? சின்னத்தை தொலைத்துவிட்டு…பணத்தைக்கொ ட்டி ஒரு அணியும்… பிணத்தைக் காட்டி மற்றொரு அணியும்.. அம்மாவைபோல் முகத்தை காட்டி இன் னொரு அணியும்.. வாக்கை களவாடும் களவாணி த்தனத்தால் நமக்கு என்ன பயன்… நம் தமிழ்நாட்டு க்கு என்ன பயன்? இல்லை… இந்திய தேசத்துக்குத்தான் என்ன முன்னேற் றம்? எவருக்கேனும்தெரிந்தால் உடனடியாய் தெரிவியுங்கள்
மக்களே!
போராட்டம் என்பது மக்களின் உரிமைக் குரல்… ஒத்துக் கொள்வோம். போராடாமல் அரசின் கவன த்தை திசைதிருப்பி வெற்றி பெற முடியாது என்ப தையும் ஏற்றுக் கொள்வோம்… ஆனால் எங்கு போராட்டம் நடத்தினாலும்.. எவர்போராட்டம் நடத்தினா லும் போராட்டக்காரர்களைவிட ஆதரவு தருவதற்கு என் றே அவதாரம் எடுத்தாற்போன்று சிலர் படையெடுத்து பர பரப்பை ஏற்படுத்து வது எதனால்? சூரிய னின் கீழே உள்ள உல கத்தில் எது எவருக்கு ஏற்பட் டாலும் கருத்துச் சொல் வதற்கென்றே ஒரு கூட்டம் காத்திருப்பதும்… கருத்து
சுதந் திரம் என்ற பெயரில் ஊட கங்களும் சமூக வலை தளங் களும் பிரச்சனைகளை பெரிதாக்கி பிழைக்க வேண்டிய து ஏன்? எதுவுமே புரிய வில்லையே?
கடனை கொடுக்கச்சொல்லியும் போராட்டம்… கடனை த்தள்ளுபடி செய்யசொல்லியும் போராட்டம்… நல்ல மருத்துவர் வேண்டும்வேண்டும்.. திற மையான மருத்துவர்கள் வேண்டும் என்பதற்கு போராட் டம், திறமையைத் தேர்வு செய்து தகுதி தேர்வு வைத்தால் அதை தடை செய்யச் சொல்லிப் போராட்டம்… எந்த அரசும் எந்த நிர்வாகமும் குழம் பாமல் என்ன செய்யும்?
குடிக்கும் மக்களுக்கான ஆட்சி தொலைந்து குடிமக்களுக்கான ஆட்சி மலர்ந்தால் மட்டுமே குழப்பங்கள் குறையும். தெளிவு பிறக்கும் என்ற உரத்த சிந்தனை உச்சிவெயில் ஆடித்தாலும் ஊரெல்லாம் பரப்பிடுவோம்.
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
திரு.உதயம் ராம் : 94440 11105
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
” ஒண்ணுமே புரியலை . . . ஒண்ணுமே புரியலை . . . 2017
ஏப்ரல் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் தமிழ்நாட்டில்
மட்டுமல்ல… இந்தியாவிலேயே நடக்கிற பல விஷயங்கள் நமக்குப் புரியவில்லை. ஏன்?
எதற்கு? எப்படி? என்று சிந்திக்க முடியாதபடி சில மாதங”