அடிக்கடி தனியாவில் தேநீர் தயாரித்து குடித்து வந்தால்…
அடிக்கடி தனியாவில் தேநீர் தயாரித்து குடித்து வந்தால்…
கொத்தமல்லியின் விதைதான் தனியா, இந்த தனியா, தனியாக தனக் கென்று
மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது அவற்றில் ஒன்றி னை இங்கு காண்போம்.
பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்து அதில் தனியா, கொஞ்சம் சுக்குப்பொடி, வெல்லத்தூள், 1 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து எரியும் ஸ்டவ்வில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். அக் கலவை நன்குகொதித்ததும் அதனை அப்படியே எடுத்து தனியே வடிகட்டவேண்டும். அதன்பிறகு மிதமான சூடுள்ள பால் சேர்த்து குழந்தைகள் முதல் பெரியோர்களுக்கு வரை குடித்துவரலா ம்.
அவ்வாறு அவர்கள் குடித்துவந்தால் உடலில்உள்ள உள் ளுறுப்புகளுக்கு குளிர்ச்சி தருகிறது. மாதவிடாய் காலங் களில் பெண்களின் உடலில் அதிக ரத்தப்போக்
கை தடுக் கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ரத்த கசிவு முற்றிலும் குணமாகிறது. மேலும் வயிற்று கோளாறு, வாயு தொல்லையை அகற்றி, குடல் புண்க ளை ஆற்றும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்து வம் (மருத்துவரைஅணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்).
வி. தினகரன்