Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டுபூஜை அறையில் வைக்கக்கூடிய -வைக்கக்கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி

வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடிய சாமிபடங்களும் – வைக்கக் கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி…

வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடிய சாமிபடங்களும் – வைக்கக் கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி…

பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அவை

என்னவென்று பார்க்கலாம். விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீலக்ஷ்மியுடன்கூடிய நாராயணன், அம்பிகையுடன்கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன்கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலக்ஷ்மி. இது தவர பானலிங்கம், சிவலிங்கம். (1 ஜான்அளவு அதற்கு மேல் போக கூடாது).

ஆகம நெறிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே இப்படங்களை வைத்துக் கொள்ளவேண்டும். .

ஒரு ஜான் (கட்டை விரல் அளவு) மேல்உள்ள விக்கி ரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம்ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் தெரிவிக்கிறது. மேரு, ஸ்ரீசக்ரம் மற்றும் யந்திரங்கள் இ வைகளை முறைப்படி உபதேசம் வாங்கிக்கொண்டு ஜபம், தியானம் செய்வதாக இருந்தால் மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும்.

தவறினால்சில யந்திரங்கள் விபரீதமானகெடுபலங்களை தரும். சக்தி உபாசகர்கள் மட்டுமே ஸ்ரீசக்ரம் , மேரு வைத்து பூஜிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது ஜலமோ வைத்து பூஜிக்க வே ண்டும். சங்கை காலியாக வைக்க லாகாது. சங்கை எது வும் போடாமல் இருக்கும்பட்சத்தில் கமுத்தி வைக்கலாம் . சங்கின் நுனி கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.

வைக்கக்கூடாத சாமி படங்கள்

-(உக்கிரவடிவம்கொண்ட ஸ்ரீகாளியம்மன், மகிஷாசுரமர்த்தினி , ஆஞ்ச னேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர், முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரபமூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது. (உக்கிர தெய்வங்கள் நமது குலதெய்வமாக இருக்கும்பட்சத்தில் அந்த சாமிபடங்களை மட்டும் வைக்கலாம்.)

மேலும் உடைந்தபடங்கள், சிதைந்த சாமிசிலைகள் இவைக ளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற் றிலோ கோவில்களிலோ அல்லது ஏரியிலோ விட்டு விட வேண்டும். நமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்க வேண்டும் பூஜைஅறையில் சாமிக்கு நிகராக வைக்ககூடாது.

=> சண்முக சுந்தரம்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

2 Comments

  • உக்கிரமான தெய்வங்களை வைக்க கூடாது, ஆனா நம்மதுன்னா வச்சுக்கலாம், யாரோ சொல்லி கொடுத்த தெய்வங்களை வச்சுக்கலாம் ஆனா நமது கண்கண்ட தெய்வம் தாய் தகப்பன் படத்தை வச்சுக்க கூடாதுன்னா என்ன ஆன்மீகமோ ?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: