Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குடல் – அந்த விஷயங்கள் என்னவென்று பார்க்க‍லாம் வாங்க

குடல் – ‘அந்த’ விஷயங்கள் என்னவென்று பார்க்க‍லாம் வாங்க

குடல் – ‘அந்த’ விஷயங்கள் என்னவென்று பார்க்க‍லாம் வாங்க

நாம் ஆரோக்கியமாக இருக்க‍ வேண்டுமெனில் நமது குடல் ஆரோக்கிய மாக

இருக்க வேண்டும் நமது குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், நாம் அன்றாடம் ஒருசில விஷயங்க ளைப் பின்பற்ற வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணரான பிரியா சகுஜா கூறுகிறார். மேலும் அந்த விஷயங்கள் என்னவென்றும் பட்டியலிட்டுள்ளார்.

குடல்ஆரோக்கியமாக நல்லநிலையில் இருக்கவேண்டுமானால் உண் ணும் உணவுகளில் புரோபயோடிக்குகள் என்னும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். குடல் ஆரோக்கிய மாக இல்லாவிட்டால் உண்ணும் உணவுகளில் உள்ள சத்து க்கள் சரியாக குடலால் உறிஞ்சப்படாமல் போகும்.

எனவே குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், நாம் அன்றாடம் ஒருசில விஷயங்களைப் பின்பற்றவேண்டும் என ஊட்ட ச்சத்து நிபுணரான பிரியா சகுஜா கூறுகிறார். மேலும் அந்த விஷயங்கள் என்னவென்றும் பட்டியலிட்டுள்ளார். அதை படித்துதெரிந்து பின்பற்றுங்கள்
 
நார்ச்சத்துள்ள உணவுகள்

குடலில் நல்லபாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்க வேண் டுமானால், நார்ச்சத்துள்ள உணவுகளான பழங்கள், பீன்ஸ் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளவேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 30 கிராம் நார்ச்சத்து எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
 
முழு தானியங்கள்

முழு தானியங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம், மெட்டபாலிசம் மற்றும் குடலில் நல்ல பாக்டீரி யாக்களின் அளவு மேம்பட்டிருப்பதை நன்கு காணலாம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியின்மூலமும் குடல் ஆரோக்கியத்தை மேம்படு த்தலாம். உடற்பயிற்சி செய்வதால், குடலில் ஏற்படும் அழற் சியினளவு குறைக்கப்பட்டு, நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும். எப்படியெனில், உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை அதிகம்வெளியேற்றப்படுவதால் , நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு களை அதிகம்உட்கொள்ளவைத்து உடலில்ஆற்றல் சீராக பராம ரிக்கப்பட்டு, குடல் ஆரோக்கியம் மேம்படும்.
 
ஆன்டி-பயாடிக் மருந்துகள்

ஆன்டிபயாடிக்மருந்துகள், நல்ல மற்றும் கெட்டபாக்டீரியாக் களைக் குறிவைக்கும். எனவே நீங்களாக ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுப்பவராயின், உடனே அப்பழக்கத் தைக்கை விடுங்கள். மேலும் மருத்துவரின் பரிந்துரையின்றி எப்போது ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுக்காதீர்கள்.

காபி

காபியில் மலமிளக்கும் பண்புகளள்ளது. இது செரிமா ன மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிலும் தினமும் 2கப் காபியை குடித்தால், குடலில் பிஃபிடோபாக்டீரியத்தின் அளவு அதிகரித்து, கெட்ட பாக்டீ ரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படும்.
 
=> மஹாலஷ்மி எஸ்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: