அதிக ரிஸ்க்குடன் அதிக இலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) முதலீடு – ஒரு பார்வை
அதிக ரிஸ்க்குடன் அதிக இலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) முதலீடு – ஒரு பார்வை
சந்தை அபாயத்துக்கு ‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உட்பட்டது. திட்டம் தொடர்பான அனைத்து
தகவல்களையும் கவனமாகப்படிக்கவும்’ என டிவி மற்றும் பத்திரிகைகளில் அறிவிக்கும்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஏதோ ஓர் ஏமாற்றுத் திட்டமோ!’ என ஒரு சிலருக்குத் தோன்றும்.
மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு
உண்மையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது, வங்கி மற்றும் பங்கு ச்சந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீட் டை விட சிறந்தது. நீண்டகால நோக்கில் முதலீடு மேற்கொள்ளப்படும்போது, நம் முடைய பணம் பாதுகாப்போடு இருப்பது மட்டுமல்லாமல் அதிக வருமானமும் வழ ங்கக்கூடியது. ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க்இருக்கிறது. உதாரணமாக, வங்கி டெபாசிட்கணக்கில் முதலீடுசெய்கிறீர்கள் என்
றால் அதில் கிடைக்கும் லாபம் அனைவருக்கும் ஒன்று தான். ஏதாவது ரிஸ்க் என்றாலும் அனைவருக்கும் ஒன்றுதான். பங்குச்சந்தை, ரியல்எஸ்டேட், தங்கம் என பல வகையான முதலீடுகள் இருந்தாலும், அதிலருக்கும் ரிஸ்க்கின் அளவு கிட்டத்தட்ட அனைவருக்கும் சமம். ஆனால், உங்களின் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்கள் இருப்பது மியூச் சுவல் ஃபண்டில்தான்.
அதிக ரிஸ்க், அதிக வருமானம்:
பங்குச்சந்தை, ரியல்எஸ்டேட், தங்கம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அதிக அளவில் பணம் தேவைப்படும். ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் அப்படியல்ல. வெ றும் ரூ.500 இருந்தால்கூட போதும். மாதம்தோறு ம் எஸ்.ஐ.பி மூலமாக முதலீட்டை மேற்கொண்டு
வருமான த்தை ஈட்டலாம். `மியூச்சுவல் ஃபண்டில் எனக்கு ரிஸ்கே வேண்டாம்; குறைந்த வருமானமே போதும்’ என்று நினைத் தாலும் அதற்கேற்ற முதலீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. `என்னால் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும்’ என்றாலும் அதற்கேற்ற முதலீட்டுத் திட்டங்களும் இருக்கின்றன. அதிக வருமானம் வேண்டும், அதிக ரிஸ்க் எடுக்கத்
தயார் என்றாலும் அதற்கேற்ற முதலீட்டுத் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்டி ல் மட்டுமே உள்ளன. எனவே, உங்களால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கமுடியுமோ, அந்தளவுக்கு முதலீட்டுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுமட்டுமின்றி வருமான வரிவிலக்குப் பெறுவதற்கு என்றே தனியாக மியூச்சுவல் ஃபண்ட்கள் இருக்கின்றன. 80C பிரிவின் கீழ் ஒரு நிதி ஆண்டுக்கு அதிக பட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை
வரிவிலக்கு பெற முடியும்.
எந்த ஃபண்டில் முதலீடு?
நம்முடைய உடனடிதேவைக்கு அதாவது ஓர் ஆண்டு காலத் தேவைக்கு ஷார்ட் டெர்ம்ஃபண்ட், லிக்விட் ஃபண்ட், இன்கம் ஃபண்டுகளில், அல்ட்ராஷார்ட் டெர்ம் ஃபண்டில் முதலீடுசெய்யலாம். இடைக்காலதேவைக்கு அதாவது சுமார் ஓர் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான தேவைக்கு மீடியம் டேர்ம் ஃபண்ட்களான பேலன்ஸ்டு ஃபண்ட், ஹைபிரிட்
ஃபண்ட், இ.எல்.எஸ்.எஸ், ஷார்ட் அண்ட் மீடியம் டெர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். நீண்டகாலத்தேவைக்கு அதாவது 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு செக்டார் ஃபண்ட்ஸ் மற்றும் ஈவிக்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
=> சோ.கார்த்திகேயன், விகடன்