நடிகர் ஜெய் வரமுடியாது என்கிறார் – நடிகை அஞ்சலி ஃபோனை எடுக்க வில்லை – புலம்பலோ புலம்பல்
நடிகர் ஜெய் வரமுடியாது என்கிறார் – நடிகை அஞ்சலி ஃபோனை எடுக்க வில்லை – புலம்பலோ புலம்பல்
தொடர் தோல்விகளால் சற்றும் சோர்ந்து போகாமல் நடித்து வரும் ஜெய் யின்
திரையுலகப் பயணம் ரிவர்ஸ் கியரில் சென்று கொண் டிருக்கிறது. தற்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘பலூன்’ படம் வெற்றியடைந்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.
இப்படியொரு சிக்கலான சூழலில் தான் இருப்பதை ஜெய் உணரவில்லை என்பதுதான் கொடுமை. பலூன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் வேலைகள் நடை பெற்று வருகின்றன. 70 எம்எம் நிறு வனத்துடன் இணைந்து திலீப் சுப்பராயன் தயாரித்து வரும்
இப்படத்தை சினிஷ் இயக்கி வருகிறார். ஜெய்யுடன் அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பலூன் திரைப்படத்தை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் விரைவில் வெளியிடவிரு க்கிறது.
இந்நிலையில் பலூன் படத்துக்கு பிரஸ்மீட் வைத் து புரமோஷன் வேலைகளை தொடங்க தயாரிப் பாளர் திட்டமிட்டு ஜெய்யை தொடர்புகொண்டபோ து, வழக்கம்போல் புரமோஷனுக்கு வர முடியாது என்று சொல்லி விட்டா ராம்.
அஞ்சலியை தொடர்பு கொண்டபோது, போனை எடுக்க வே இல்லையாம். கடந்த சில வாரங்களாக அஞ்சலி யை போனில் தொடர்புகொள்ள முயன்று வெறுத்துப் போய் விட்டாராம் தயாரிப்பாளர். புரமோஷனுக்குப் போக வேண்டாம் என அஞ்சலியின் மனதை மாற்றினாரா ஜெய்?
Baloon, Actress, Anjali, Actor, Jai, Janani Iyer, Yuvan Shankar Raja , Dilip Subbrayan, Tamil, Film, Movie, Shooting, Love, Marriage, Phone, Cell, Promotion, Aara Cinemas
Thanks for your breaking news