Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெய் சேர்த்த உணவுகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

நெய் சேர்த்த உணவுகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .

நெய் சேர்த்த உணவுகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .

பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை

உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்து டன் உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை. ஆனா ல் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒருமிக சிறந்த போஷாக்கான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு நெய் மிக முக்கியமான மருந்து.

நெய் எளிதில் ஜீரணமாகி விடும். சாப்பிட்டவுடன் அவை கொழுப்பாக உட லில் தங்கப்படுவதில்லை. மாறாக எனர்ஜியாக எரிக்கப்படுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதி கரிக்காது.  மாலைக்கண் மற்றும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை என பார்வை குறைபாடு இருப்பவ ர்கள் கட்டாயம் நெய்யை சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை தெளிவடையும். பால், தயிர் போன் றவற்றில் ஒவ்வாமை இருப்பவர்கள் தாராளமாக நெய் சேர்த்துக்கொள்ள லாம். அவற்றிலுள்ள லாக்டோஸ் இல்லையே தவிர அவற்றின் பண்பு கள் ஒத்திருக்கும்.

நெய்யில் நிறைய நேர்மறையான குணங்கள் இருப்பதால் அதனை சாப்பிடுவதால் நேர்மறை எண்ணங்கள்  அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது. மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொரு ளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர் வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிற து. ஏன் என்றால் முழு உடல்நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கும் குணம் நெய்க்குஉண்டு. அவை மருந்துக்களின் குணங் களை செல்களின் சுவருக்குள் ஊடுருவச் செய்கிறது.

மலச்சிக்கலைப்போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதன் தன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்க த்தைத் தடுக்கும். சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல்மூச்சு வா ங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு கா ரணம் உடலில் சத்தின்மையே. இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

வாட்ஸ் அப்பில் வந்த அருமையான தகவல்
Ghee – Ghee mixed Food – Healthy

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply