Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாடு வேண்டாம். . . மாற்றம் வேண்டும்

மாடு வேண்டாம். . . மாற்றம் வேண்டும்

மாடு வேண்டாம். . . மாற்றம் வேண்டும்

(ஜுன் 2017, நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்)

நோட்டிலும் மாட்டிலும் மாட்டிக் கொண்டு மத்திய அரசு மதிப்பிழந்து வருகிறது என்கிற

குரல் ஊரெங்கும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ரூபாய் நோட்டு மாற்று விவகாரத்தில் ஒரே நாளில் எடுத்த‍ மு டிவால் பொருளா தாரம் முன்னேறியதா? கள்ள‍ப்பணம் காணா மல் போனதா? அதிரடி வரி ஏய்ப்பு சோதனைகளில் மாட்டிய வர்கள் தண்டிக்கப்பட்டார்களா? பிடிப்பட்ட பணமெல்லாம் அரசு கருவூலத்தை அடைந்ததா? இந்த சந்தேகங்களுக்கு தெளிவு பிறப்பதற்குள் தொடங்கிவிட்டது அடுத்த அதிரடி

இறைச்சிக்காக மாடுகளை விற்பது தடை செய்ய‍ப்பட்டதாக வந்துள்ள‍ சட்ட‍த்தின் முழுவிவரம் தெளிவாக்கப்படாததால் மக்க‍ள் வெ வ்வேறு கோணங்களில் எல்லாம் பொங்கியெழுந்து போராடுவது தவிர்க்க‍ முடியாததாகி விட்டது.

பசுக்க‍ள் தெய்வாம்சமுடையவை… அதை உண்பது பாவம் … பசுக்களை காளை களை இறைச்சிக்காகவே கொல்வது தவறு… அங்கீகரிக்க‍ப்படாதவர்களால் இறைச்சிக் கூடங்க ள் பெருகி தனி மனிதர்கள் கொழுக்கின்றனர் என்றெல்லா ம் காரணங்கள் காட்டி சட்ட‍மியற்றல் பட்டிருக்கிறது. இது ஒரு புறம்.

இச்சட்ட‍த்தின் மூலம் மனிதனின் உணவு உரிமைப் பறிக்க‍ ப்படுகிறது. பாரம்பரிய உணவுப்பழக்க‍த்தோடு அரசு அத்து மீறி விளையாடுகிறது… மத உணர்வுகளை மிதிக்கிறது என்று பிரச்சனையை மதரீதியாக அணுகி போராடுகின்ற னர். இதுமறு புறம்

தோல் பொருட்கள் ஏற்றுமதியால் ரூ.3000 கோடி 2018ல் கிடைக்கும் என்றும் இல க்கு நிர்ணயித்த அரசே… இப்ப‍டியொரு சட்ட த்தை அனுமதித்து அந்த தொழிலையே அழிக்க நினை ப்பது நியாயமா? என்ற கேள்வியால் இருக்கி ன்ற நியாயத்தை அரசு கவனத்தில் கொள்ளாதது ஏன்?

வெவ்வேறு உணவுகலாச்சாரம்… உடை கலாச்சார ம் மொழி கலாச்சாரம், வாழ்க்கை முறை. . . எல்லாம் இணைந்து இயங்கும் இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில். . . சட்டத்தின் மூலமோ பிடிவா த்த்தின் மூலமோ மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்பதை ஏன் ஆளு ம் கட்சியினர் உணர மறுக்கின்றனர்?

மாட்டிறைச்சி சம்பந்தமான தடையை அறிவித்திருப்ப‍து நீதி மன்றம்தான். எனவே, அரசியல்வாதிகளும் மதவாதிகளும் பிரச்சனைகளுக்காகவே தினம் விழிக்கின்ற சமூக வலை தளங்களும், கருத்து சுதந்திர கலவர சிந்தனையாளர்களும் அதன் சாதக பாதகங்க ளை சட்ட‍ரீதியாக அணுகினால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும் மாறாக மதப் பிரச்சனையாக மானப் பிரச்சனையாக மாற்றினால் குழப்பமே மிஞ்சும் கலவரங்களே விஞ்சும்.

முடிவெடுத்துவிட்டு அதனை அடுத்த‍வர்மீது திணிப்பது விவாதத்திற்கு வி ட்டு வேடிக்கைப் பார்ப்ப‍து என்பது சர்வாதிகாரம். நோட்டிலும் மா ட்டிலும் அதைத்தான் செய்திருக்கிறது மோடி அரசு, மாறாக, மாற்று க்கருத்து க்களை உள்வாங்கி விவாதித்து அதன்பின் முடிவெப்பது தான் ஜன நாயகம்

மாடு உணவுக்குரியது என்று போராடுபவர்களும் மாடு உணர்வுக்குரி யது என்று போதிப்பவர்களும் நாடு நமக்குரியது என்று உரத்து சிந்தித்தால் கோமாதா நமக்கு கோவில் கட்டி கும்பிடும்.

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: