Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்

சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்…

சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்… (If Drink Thulsi Mixed Milk . . .)

அந்த காலத்தில் வீட்டிற்கு ஒரு துளசி மாடம் இருந்தது அதில் மருத்துவ குணம் நிறைந்த

துளசி செடியை வளர்த்த‍னர். வணங்கினர். ஆனால் இப்போ தோ நாகரீகம் என்ற பெயரில் பயன்தராத விஷச் செடிகளை காட்சிப்பொருளாக வைத்திருக்கின்றனர்.

அந்த துளசியில்உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இதயத்தின் நலனை ஊக்குவித்து, இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் நன்றாக சென்று வருவதற்கு உதவுகிறது. ஆகவே சூடான 1டம்ளர் பாலில் துளசி (Thulsi add in Milk)  சே ர்த்து குடித்துவந்தால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், உடலின் வெப்பதை குறைத்து, காய்ச்சலை விரைவாக குறை க்கிறது. மேலும் இது மன அழுத்தத்தை (Tension) ஏற்படுத்தும் ஹார்மோன்களை (Hormone)  கட்டுப்படுத்தி, பதட்டம் (Nervous) போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை குறைத்து, நரம்பு (Neuro) மண்டலத்தின் ஆரோ க்கியத்தை பாதுகாக்கிறது. தொண்டை கரகரப்பு, சளி (Cold ), வறட்டு இருமல் (Dry Cough) மற்றும் தலைவலி (Head Ache) போன்ற பிரச்சனை கள் வராமல் தடுக்கிறது.

எல்லாவற்றிற்கும்மேலாக துளசி, பால் கலந்த பானத்தில் உள்ள சிறந்த டையூரிடிக், யூரிக்அமிலத்தின் அளவைகுறைத்து சிறுநீரகத்தில் கற்கள் (Kidney Stone) உண்டாவதையும், அதைகரைக்கவும் உதவுகிறது.  மரு த்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் குடித்து வரவும்

=> சாந்தா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: