வரி மாற்றம்! தேச முன்னேற்றம்!!
வரி மாற்றம்! தேச முன்னேற்றம்!!
(ஜூலை 2017 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்)
ஒரே நாடு… ஒரே வரி… ஒரே சந்தை என்ற விளக்கத்துடன் விஸ்வரூபமெடுத்து ள்ள ஜி.எஸ்.டி. (GST – Goods and Service Tax) என்ற
மூன்றெழுத்து இந்திய தேசத்தின் தெருவெங்கும் ஒலி ப்பதைப் பார்க்கும்போது… எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு… நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு என்ற சுதந்திர வேட்கைப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டுமானாய்… ஒரே வரி என்பதுதான் அந்த ஒருவரி! (நன்றி கார்ட்டூனி ஸ்ட் ஸ்ரீ காந்த்) இது வரிவிகித மாற்றமல்ல… வரிசெலுத்தும்முறையில்… மாற்றம்… என்பது தான் சரி.
கலால் வரி… சுங்க வரி… சேவை வரி… சுகாதார வரி… கல்வி வரி… விவசாய நலன் வரி… வரிக்கு வரி… என பல முகங்களாய் மாநிலத்துக்கு மாநிலம் வேடமணி ந்து வேறுபட்டு திரிந்துகொண்டு இருந்த வரி முகங்கள் ஜி.எஸ்.டி. என்ற ஒரே முக மாக்க முனைந்திருக்கும் மோடி
அரசின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
தேசமெங்கும் ஒரே வரி என்பதால் காஷ்மீரில் புறப்படும் ஒரு பொருள்… இனி சுங்கச்சாவடி சோதனை, மாநிலத்து க்கு மாநிலம் வரி செலுத்துதல் என்று நேர விரைய மின்றி விரைந்து பயணிக்கும் மனித உழைப்பு மேம்படும். எரி பொருள் மிச்சமாகும். பொருட்கள் சோதனை – பதிவுகள் சோதனை என்ற பெயரில் மூலைக்கு மூலை ஜாதி மத மொழி பேதமின்றி அதிகாரிகளின் அதிகாரப் பிச்சை முடி வுக்கு வரும். அரசு ஊழியர்களும், பொதுத்துறை ஊழியர்க ளும் சில நேர்மையான நிறுவனங்களுக்கும் மட்டும் வரி செலுத்திய அவலம் மாறி… நுகர்வோரும், வாழ்வோரும், உற்பத்தி செய்வோரும் எல்லோருமே இந்திய தேசத்திற்கு வரி கொடுக்கும் வள்ளல்களாகும் ஆரோக்கிய நிலை உருவாகும்
உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டுக் கொ ண்டிருக்கும் ஒரு வரி (சிங்கிள் டேக்ஸ்) கொள்கை இந்திய தேச த்தில் செயல்படுத்த முடியாமல் போனதற்கு காரணம். முது கெலும்பில்லாத வாங்கு வாங்கி அரசுகள் மட்டுமல்ல… வரி கட்டாமல் இருப்பதை பெருமையாக நினைக்கும் தேசப்ப ற்றி ல்லாத மாக்களும்தான் (மக்களும்தான்)
வரிக்கு வரி பாராட்டுகிறீர்களே . . இதில் உள்ள ஓட்டைக ளை எழுதக்கூடாதா என்று பல கேட்கலாம். குழப்பம் இரு க்கிறது. பாலுக்கு வரியில்லை தேயிலைக்கு வரியில்லை. அப்போது காப்பி, டீ விலை ஏறுமா? இறங்குமா! கை யில் வாங்கும் பருப்புக்கு வரியில்லை… ஆனால் பையில் அடைத்து வாங்கினால் வரி… குழப்பம் இருக்கிறது. வணிகர்கள், அதிகாரிகள், நிறுவனங்கள், இந்த புதிய வரிமுறைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வில்லை. கடைக்குக் கடை விலை வேறுபாடு இருக்கிறது. போன்ற குறைபாடுகள் இருக்கிறது. அரசுக்கு ஏன் இத்தனை அவசரம்… யாருக்காக இந்த அவசியம்… என்ற கேள்விகளும் ஒத்து க்கொள்ள வேண்டிய நியாங்கள்தான்
போரில் குதிக்கத் தெரிந்த வீரனுக்கு அதை வெற்றிக் கொள்ளவும், தெரியும் என்று இந்த அரசை இந்திய குடிமனாய் நம்புவோம்.
நான் வளம்பெற வரிஏய்ப்பு செய்வேன் என்ற புழுத்த சிந்தனை யைப் புறந்தள்ளி நாடு வளம்பெற… பலன்பெற நானும் வரி செலு த்துபவர் என்ற புதிய சிந்தனையுடன் புறப்படுவோம்.
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
திரு.உதயம் ராம் : 94440 11105
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|