Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

BIGG BOSS ஓவியாவை குறைசொல்ல இவர்களுக்கு என்ன‍ அருகதை இருக்கிறது.

BIGG BOSS ஓவியாவை குறைசொல்ல இவர்களுக்கு எந்த‌ அருகதையும் இல்லை.

பிக் பாஸ் ஓவியாவை குறைசொல்ல இவர்களுக்கு எந்த‌ அருகதையும் இல்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சி… ஏற்கெனவே பதிவுசெய்ய‍ப்பட்ட நிகழ்ச்சியோ அல்ல‍து திரை ப்படம் போல்

அமைக்க‍ப்பட்ட‍ நிகழ்ச்சியோ, அதில் இருக்கும் அத்த‍னைபேரும் நடிக்கிறார்களோ உண்மையிலேயே அது நேர்மையான‌ நிகழ்ச்சியா? போன்ற கேள்விகளுக்குள் நான் செல்ல‍ விரும்பவில்லை. நான் ஓவியாவின் ரசிகனும் இல்லை. ஜுலியின் ஆதரவாளனும் இல்லை. ஒரு மனிதனாக இருந்து இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

நேற்று (20/07/2017) விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி, என்னை சற்று சிந்திக்க‍ வைத்த‍து காரணம், நேற்று கபடி குழுவினர் வருவதாக பிக் பாஸ் ஒலிபெருக்கி வாயிலாக திடிரென்று அறிவித்தார். அதைக்கேட்ட‍ அனைவரு ம் ஆர்வத்து டன் வாயில் நோக்கி ஓடினர். அப்படி ஓடும்போது ஜுலி, தடுக்கி கீழே குப்புற விழு ந்தார். விழுந்தபோது கால்முட்டி மற்றும் மார்பு பகுதியில் லேசான அடி இருப்ப‍தாக தெரிவித்துள்ளார். ஜுலி தனது நெருங்கிய தோழியான நடிகை ஓவியா விடம், தான் கீழே விழுந்ததால், கால் முட்டி, நெஞ்சு பகுதி வலிப்பதாக தெரிவித்தா ர். அதன் பிறகு கபடி அணி வந்தது. ஒருவருக்கொருவர் அறிமுகப் படலமும், கடுங்காப்பி உபசரிப்பு படலமும் முடிந்தது. அதன்பிறகு பிக் பாஸ்-ன் உத்த‍ரவுப்படி கபடி அணியுடன் பிக்பாஸ் ஆண் அணி, கபடி விளையாடிய பிறகு, கபடி அணி விடைபெற்றது.

அதன்பிறகுதான் அந்தசம்பவம் நடந்தது. மார்ப்புக்கு கீழே வலியிருந்ததால் ஹாலி ல் உள்ள‍ ஒரு சோபாவில் அமர்ந்திருந்தார் ஜுலி. ஜுலியை சாப்பிட அழைக்க‍ வந்த சக்தி மற்றும் சிநேகனிடம் லேசாக வலிக்குது அண்ணா நான் வரவில்லை என்றார். இருப்பினும் சக்தி மற்றும் சிநேகனின் வற்புறுத்த‍லால் உணவருந்தும் மேஜைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தார் ஜுலி. அவர் வந்த அமர்ந்த சில நிமிடங்களில் வயிறு வலிப்ப‍தாக சொல்லி அப்படியே கீழே சரிந்தார். அவர் வலியென்று சரிந்த தும் சிநேகன் ஜுலியை அலேக்காக கைக்க‍ளில் தூக்கி அருகில் இருந்த சோபாவில் படுக்க‍ வைத்தார். சக்தியும் கணேஷும் கேமராமுன்பு பிக்பாஸிடம் ஜுலிக்கு வயிற்றில் அடிப்பட்டுள்ள‍து உடனடியாக மருத்துவ உதவி தேவை என்றனர்.

சிநேகன்… ஜுலியை படுக்க‍ வைத்து, என்ன‍ ஆயிற்று என்று கேட்டுக்கொண்டிருக்கு ம்போதே திடீரென்று ஜுலிக்கு மூச்சி வாங்கி யது கண்கள்சொ ருகியது. வலியால் கதறினார். இந்த நேரத்தில் நடிகை ஓவியா ஓடி ன்று தண்ணீர் பாட்டில் கொ ண்டு வந்து சிநேகனிடம் கொடுத்து ஜுலிக்கு கொடுக்க‍ச் சொன்னார். நடிகர் வையா புரி தலையணை கொண்டு வந்து கொடுத்தார். ஆரவ் ஜுலியின் அருகில் இருந்து ஒன்றும் ஆகாது தைரியமாக இரு என்று தைரி யமூட்டிக் கொண்டிருந்தா ர். ஆக இந்த சம்பவத்தின் போது சிநேகன், சக்தி, ஆரவ், வையாபுரி, கணேஷ் மற்றும் நடிகை ஓவியா இவர்கள் மட்டுமே ஜுலிக்கு தேவையான முதலுதவிகளை செய்து ஓரளவு ஜுலியை தேற்றினர்.

நடன இயக்குநர் காயத்ரி ரகுராம், விளம்பர நடிகை ரைஸா மற்றும் நடிகை நமீதா ஆகிய மூவரும் தூர இருந்து கொண்டே ஜுலி எப்ப‍டி நடிக்கிறா பாருங்க. அவளுக்கு முதல் பரிசு. இப்படி கன்றாவியை நான் பாரத்த‍தே இல்லை என்று

சிறிது நேரத்தில் மருத்துவம் பார்ப்ப‍தற்கு ஜுலியை கம்ப்ரஷன் அறைக்கு அழைத்து வர பிக் பாஸ் ஆணையிட்டார். உடனே , ஜுலியை சிநேகனும் சக்தியும்தான் அழைத்துச் சென்றனர். அப்போதும் காயத்ரியோ, ரைசாவோ, நமீதாவோ உடன் செல்ல‍வி ல்லை.

மருத்துவர் பரிசோதித்த‍ பிறகு ஜூலிக்கு வயிற்றுப் பகுதியில் ரத்த‍க் காயம் ஏற்பட்டி ருக்கிறதா என்பதை பார்க்க சொல்லியிருக்கிறார் மருத்துவர். சிநேகனும் கணேஷு ம், காயத்ரியிடமும் ஓவியாவிடமும் ஜிலியை அழைத்துச் சென்று வயிற்றுப் பகுதி யில் ஏதேனும் ரத்த‍ காயம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை பார்த்து வரச் சொன்னார்க ள். அதன்பிறகே ஜுலியை, குளியலறைக்கு ஓவியா, காயத்ரி மற்றும் ரைசா அழை த்துச் சென்று பரிசோதித்து விட்டு மீண்டும் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.

வெளியே ஆரவ்-டம் அந்த சமயத்தில் காயத்ரி, ஜுலியை கண்டால் பாவமாக இருக்கிறது உண்மையாகவே அடிப்பட்டிருக்குது என்றார்.

மருத்துவரின் சிகிச்சை முடிந்து, ஜுலியை ஓவியா படுக்கையறைக்கு அழைத்து வந்து படுக்கையில் படுக்க‍ வைத்து, ஆறுதலாக பேசினார். அப்போது, ஜூலி, ஒரு மனுஷி வலியால் துடிக்கிறேன் என்ன நல்லா நடி க்கிற என்று கேட்கிறார்களே என்று ஆதங்கப்ப ட்டு அழுதார் . அப்போது ஓவியா, சரி விடு இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்தான் என்று அறுதல் சொல்லி க்கொண்டிருக்கும் வேளையில் காயத்ரி உள்ளே நுழைந்தார்.

உள்ளே நுழைந்த காயத்ரியிடம் ஜுலி, அக்கா நீங்க கூட நான் நடிக்கிறேன் என்று தானே நினைத்தீர்கள் என்று பரிதாபமாக கேட்டார். அதற்கு காயத்ரி நா எப்ப‍டி நினைக்கிறேன்னு நான்தான் முடிவு செய்வேன், நீ எப்ப‍டி முடிவுசெய்வாய் என்று அர்த்த‍மில்லாமல் வம்பை வளர்த்தார்.

இதனைக் கேட்ட ஓவியா ஜுலியிட‌ம், சரிவிடு ஜுலி நீ செத்தாலும் அவங்க நடிக்கி றதா தான் சொல்வாங்க என்று சொல்லி விட்டு அறையைவிட்டு வெளியேறினார்.

உடனே காயத்ரி, ஜுலியிடம் உனக்குத்தான் அவ இருக்காள்ல ஓவியாக்கிட்ட‍ போய் சொல்லு உனக்கு ஒன்னுனா அவதான் வருவான், இனிமேல் என்னிடம் நீ பேசவே வேண்டாம் நீ அக்கா சொக்கா என்று என்னிடம் வராதே என்று தேவையில்லாமலு ம் அர்த்த‍மில்லாமலும் சண்டைக்கு இழுத்தார். இதனிடையே நமீதா மற்றும் ரைசா வர அவர்களிடம் இதனைச் சொல்லி அவர்களும் தங்கள் பங்குக்கு காயத்திரியுடன் சேர்ந்து ஜுலியை திட்ட, காயத்ரி இந்த பிரச்சனை பெரிதுபடுத்திக் கொண்டே போகிறார். இடையில் ஓவியா தனது படுக்கைக்கு திரும்பினார்.

உடனே ஓவியாவை குற்ற‍வாளி கூண்டில் ஏற்றி, ஓவியாவை நேரடியாகவும், மறை முகமாகவும் திட்டி, சண்டைக்கு இழுத்த‍னர். ஆனாலும் ஓவியா இவர்களின் இந்த கேவலமான செயலை துளியும் சட்டை செய்யாமல் அந்த இடத்தை விட்டு வெளி யேறினார். அதன்பின்பும் காயத்ரி, ரைசா மற்றும் நமீதா ஆகிய மூன்று பெண்களும், ஓவியாவையும் ஜுலியை யும் ஏக வசனத்தில் திட்டி பிரச்சனையை பெரிதுபடுத்திக் கொண்டே இருந்தனர்.

சரிவிடு ஜுலி, நான்தான் தவறாக நினைத்துக்கொண்டேன் என்மீதுதான் தவறு இரு க்கிறது இப்போது எப்ப‍டி வலி இருக்குது . ஏதாவது சாப்பிடுகிறாயா என்று அன்பாக காயத்ரி.. ஜுலியிடம் கேட்டு ஆறுதலாக இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது.

ஜுலி… நல்ல‍வரோ அல்ல‍து கெட்ட‍வரோ, உண்மையாக பாதிக்கப்பட்டாரோ அல்ல‍ து நடித்தாரோ என்ற கேள்விகளுக்கு பதிலை தேடாமல்… ஒரு பெண், வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது, உடனடியாக ஓடிச்சென்று தேவையான முதலுத விகளை செய்து உதவிய சிநேகன், சக்தி, கணேஷ், ஆரவ், வையாபுரி மற்றும் நடிகை ஓவியா ஆகிய இந்த ஆறு பேரை நாம் எவ்வ‍ளவு பாராட்டினாலும் தகும்.

ஆனால் தன்னைப் போன்று ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு வரை பார்த்து எந்த விதமான பதற்றமோ, அல்ல‍து தேவையான உதவிகளை செய்ய‍ முன்வராமல் , நெஞ்சில் ஈவு இரக்க‍ம் சிறிது இன்றி ஜுலி நடிப்ப‍தாக கூறியும், கேலியும் கிண்டலும் செய்து வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் குரூர மனப்பான்மையுள்ள‍ இந்த காயத்ரி, ரைசா மற்றும் நமீதா ஆகிய மூவரும் நடிகை ஓவியா கட்ட‍ம்கட்டி ஒதுக்கி அவரை வசபாடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அருகதையும் இல்லை.

ஓவியாவை குறைசொல்ல காயத்ரி, ரைசா மற்றும் நமீதா ஆகிய மூவருக்கும் என்ன‍ அருகதை இருக்கிறது.

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: