Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதையெல்லாம் விட BIGG BOSS ரொம்ப முக்கியமா? – பட்டுக்கோட்டை பிரபாகர்

இதையெல்லாம் விட BIGG BOSS ரொம்ப முக்கியமா? – பட்டுக்கோட்டை பிரபாகர்

இதையெல்லாம் விட பிக் பாஸ் ரொம்ப முக்கியமா? – பட்டுக்கோட்டை பிரபாகர்

வெற்றிகரமாக பிக் பாஸ் 100 நாட்களில் 30 நாட்களை கடந்து விட்ட‍து. இந்நிகழ்ச்சி, பலதரப்பட்ட‍ எதிர்ப்புக்களையும்

ஆதரவினையும் பெற்றுள்ள‍து. இந்நிலையில் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை திரு. பிரபாகர் அவர்கள் முகநூலில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது கருத்தி னை தெரிவித்துள்ளார். இதோ அவர் தெரிவித்த‍ கருத்து

பெரிய முதலாளி பற்றி கருத்து சொல்லவில்லை என்றால் தெய்வ குற்றமாகி விடுமாமே.. எதற்கு வம்பு? இந்த நிகழ்ச்சியைப் பார்ப்ப வர்கள் ஆமாம் பார்க்கிறேன் என்று நேர்மையாக ஒப்பு க்கொண்டால் அது ஏதோ மானக்கேடான விஷயம் மாதிரி ஒரு மேதாவிப் பார்வை இருக்கிறது.

நான் இந்தியில் வந்த பத்து சீசன்களில் ஒரு பகுதிகூடப் பார்த்ததில்லை. தமிழ் நிகழ்ச்சியை இதுவரை ஒரு பகுதி கூட பார்க்காமல்விட்டதில்லை. சிலசமயம் பதிவுசெய்து வைத்து.. சில சமயம் இரவு 11 மணிக்கு ரிப்பீட்டில். சில சமயம் ஹாட் ஸ்டாருக்குப் போய் என்று எப்படியும் பார்த்துவிடுகிறேன்.

மீடியாவில் இயங்கும் நான் ஒரு புதிய நிகழ்ச்சியில் என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்கத் துவங்கி.. கொஞ்சம் அடிக்ட் செய்து விட்டது என்பது உண்மைதான்.

நிஜமாகவே இது ரியாலிட்டி ஷோதானா அல்லது அழு கை, கோபம், வாக்குவாதம், மன வலி, உடல் வலி, தனி மனித தாக்குதல், சர்ச்சையாகும் வார்த்தைகள், மாறி மாறி காதல், மோகம், வாழ்வின் அப்பட்டமான உ ண்மை களைக் கொட்டுதல், தப்பித்தல், கெஞ்சல், புறக்கணிப்பு, புறம் பேசுதல் எ ல்லாமே திட்டமிட்ட திரைக்கதையா என்கிற கேள்வி க்கு என் பதில்: நோ கமெண்ட்ஸ்

சுவாரசியமாக இருக்கிறதா, பார்க்க வைக்கிறதா, முடிஞ்சிடுச்சே என்று நினைக்க வைக்கிறதா என்று கேட்டால்..என் பதில்: டபுள் யெஸ்

கலாச்சாரத்தைச் சீரழிக்கிறதா என்று கேட்டால்.. என் பதில்: மிரளும் அளவு க்கெல்லாம் இல்லை. கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிக ழ்ச்சிகளில் இன்று நிகழும் அப்பட்டமான ஆபாச நடனங்களைப் பார்த்து ரசிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின ரிடம்தான் அழுத்தமாக இக் கேள்வியைக் கேட்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்:

ஓவியாவுக்கு ஒன்றரை கோடி பேர் வாக்களிக்கவில்லை. ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 ஓட்டுகள் போடலாம் என்பது விதி. ஆகவே ஒரு வாரத்தின் ஐந்து நாட்களில் ஒரு தனி நபர் 250 வாக்குகள் அளிக்க முடியும் அப்படிப் பார்த்தால் ஒவியாவுக்கு வாக்க ளித்த நபர்களின் எண்ணிக்கை வெறும் அறுபதாயிரம் பேராகவும் இருக்கலாம்.

(ஆனால் ஒன்று..குடியரசுத் தலைவர் தேர்தலிலும் செல்லா ஒட்டுக்கள் போடும் எம்.எல்.ஏ.,எம்.பிக்களு க்கு கொஞ்சம் ஸ்ட்ராங்காக வகுப்பெடுத்தல் நலம்)

சரி..யார் வெற்றி பெறுவார் அல்லது வெற்றி பெற வேண்டும் என்று கேட்டால்.. என் பதில்: கணேஷ் வெங்கட்ராம் (அதிகமாக சாப்பிடுகிறார் என்கிற ஒரு குற்றச்சா ட்டைத்தவிர வேறு எதையும் சகபோட்டியாளர்களா லேயே சொல்ல முடிய வில்லை )

வார இறுதிகளில் மட்டும் வரும் கமல் பற்றி.. நிக ழ்ச்சித் தொகுப்பு என்கிற புதிய வேலையிலும் தனி முத்திரையு டன் ஜொலிக்கிறார்.

முத்தாய்ப்பாக ஒரு விஷயம்:

கலங்கல் தண்ணீருடன் தவிக்கும் கதிராமங்கலம், அப்பாவி மாணவி வளர்மதியின் மேல் பாய்ந்த குண்டர் சட்டம், கலங்கடித்துக் கொண்டிரு க்கும் டெங்கு காய்ச்சல், மாணவர்களை அலைக்கழிக்கும் நீட்தேர்வு, இன்னும் குழப்பம்தெளியாத ஜி.எஸ்.டி, சிறை யிலிருந்தபடியே ஷாப்பிங்போகும் சசிகலா.. இதையெ ல்லாம்விட பிக்பாஸ் ரொம்ப முக்கியமா என்று மன சாட்சி ஒரு பக்கம் கேள்வி கேட்கத்தான் செய்கிறது. அதே மனசா ட்சியின் ஜெராக்ஸ் பிம்பம் ‘அந்த வலியையெல்லாம் மறக்கத்தா ன் இது!’ என்கிறது.

பொறுப்புத் துறப்பு:

விஜய் டிவி என் கணக்கில் பணம் எதுவும் செலுத்தவில்லை என்பதை தகவலறியும் சட்டத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

– பட்டுக்கோட்டை திரு. பிரபாகர் முகநூல்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: