Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

BIGG BOSS வீட்டில் மீண்டும் ஓவியா – அதிர்ச்சியில் ஜூலியும் காயத்ரியும் – வெளிவராத தகவல்

BIGG BOSS வீட்டில் மீண்டும் ஓவியா – அதிர்ச்சியில் ஜூலியும் காயத்ரியும் – வெளி வராத தகவல்

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா – அதிர்ச்சியில் ஜூலியும் காயத்ரியும் – வெளி வராத தகவல்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுப்பில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியி ன் மூலம் அதிக

பிரபலம் அடைந்திருப்பவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் பங்கே ற்றுள்ள மற்றவர்களால் பலமுறை ஓவியா வெளியேறும் சூழல் ஏற்பட்ட போதும், நேயர்களின் வாக்குகளை அதிக அளவில் பெற்று ஓவியா நிகழ்ச்சியில் தொடர்ந்து இடம்பிடித்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிக் பாஸ் அரங்கில் இரு ந்து ஓவியா வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து ஓவியாவின் ரசிகர்கள் ஓவியா இல்லையென்றால், பிக்பாஸ் இல்லை, ஓவியா இல்லை என்றால் பிக்பாஸ் பார்க்க மாட்டோம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைத்தான் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடைபெற்று வருவ தாகவும் நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் தற்போது அதனை ஓவியா உறுதி படுத்தியுள்ளார்.

மன அழுத்தத்தில் இருந்ததால் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா. அவரை நட்சத்திர விடுதியில் தங்க வைத்து மருத்துவர்கள் ஆலோசனை கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஓவியா தற்போது மன அளவில் ஆரோக்கி யமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைதான் எனவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நடிகை ஓவியா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் வெளியேற்றப்படுபவர்கள் லிஸ்டில் ஜூலி, வையாபுரி, ஓவியா ஆகி யோர் இருப்பதாலும், அவர்களில் யார் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்பது கமல் முன்னிலையில் இன்று ஷூட் செய்யப்பட இருக்கிறது. ”சில தினங்களாக ஓவியாவைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருவதால் அவற்றைத் தெளிவு படுத்தவேண்டிய கட்டாயம் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை பற்றி கமல் பேச இருக்கிறார்.

ஓவியாவின் உடல்நலம் பற்றியும் அவர் தெளிவுபடுத்த இருக்கிறார். அப்போது ஓவியா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அவர்வெளியேற்றப்படுகிறாரோ, அல்லது அவராகவே வெளியேறுகிறாரோ… ஆனால், இன்று நடைபெறும் ஷூட்டில் பங்கேற்பது அவசியம் என்பதால் நிகழ்ச்சி நிர்வாகிகள் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஓவி யாவும் சம்மதிக்க தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு இருக்கி றார். உடல் நலத்தை கருத்தில்கொண்டு ஓவியா வெளியேற விரும்பினால், அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்கள் அந்த நிகழ்ச்சியின் நிர்வாகிகள்.

இதுவரை நீங்கள் படித்தது… புதிய தலைமுறையில் வந்த செய்தி 
******************************************************************

(மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஓவியா! – பிக்பாஸில் இருந்து வெளியேறியது உண்மை: ஓவியா)

புதிதாக வந்த செவி வழிச் செய்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா பங்கேற்று இருப்ப‍தால், ஜுலியும் காயத்ரி யும் அதிர்ச்சியில் உள்ளதாகவும், ஓவியாவை வீட்டிற்குள் சேர்க்க ஜுலியும் காயத்ரி யும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த்தாகவும் செவி வழித்தகவல்கள் தெரிவிக்கின்றன•

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: