Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால்

பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால்

பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால் (Drink Garlic Kanji – Seven days once (morning))

காலை வேளையில், உங்கள் வேலைகள் அனைத்தும் தொடங்கும் வேளை என்ப தால், அச்சமயத்தில்

நாம் அவசியம் காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட்டே ஆக வேண்டும். நீங்கள் சாப்பிடாமல் இருப்ப‍தால், உடலில் தேவை யற்ற‍ அமிலங்கள் சுரக்கும் இதனால் உடலின்ஆரோக்கியமும் உள்ள‍த்தின் உற்சாகமும் குறைந்து, நாள் முழுக்க சோர்வாக, ஏதோ ஒருநோயாளிபோல உங்ளை மாற்றிவிடும். காலையில் கண்டதை குடிக்கா மல், கண்டெடுத்ததை குடித்துவந்தால் நலம்பயக்கும்.

மேலும் வாயுத் தொல்லையால் (Gastric Trouble) அவதியுறுபவர்கள், 1 கையளவு பூண்டு பற்களை எடுத்துக்கொண்டு, இதனுடன் சுக்கு, சாரணை வேர், முருங்கை இலையை ஆகிய மூன்றுடன் வேண்டியளவு புழுங்கல் அரி சியையும் தேவையான அளவு தேங்காய் பாலை சேர்த்து, கஞ்சி காய்ச்ச வேண்டும். அதன்பிறகு அந்த கஞ்சியை வெதுவெதுப்பா ன சூட்டில் இருக்கும்போதே குடித்து விட வேண்டும். இதேபோல் 7 நாட்களுக்கு 1 முறை அதாவது வாரத்திற்கு 1 நாள் காலை வேளையில், வெறும் வயிற்றில் மேற்படி முறையில் கஞ்சி சமைத்து குடி த்து வரவேண்டும். நாளடைவில் நீண்டகாலமாக தொல்லை க்கொடுத்துவரும் வாயுக்கள் உங்கள் உடலிலிருந்து வெளியே றி, உங்களது உடலுக்கும் ஆரோக்கியத்தையும், உள்ள‍த்துக்கு உற்சாகத்தையும் கொடுக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்தியம். மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் உட்கொள்ளவும்.

=> ஐ. குமாரனந்தம்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply