சிவபெருமானுக்கு உள்ள பஞ்ச (5) முகங்களும்!- உச்சரிக்க வேண்டிய தனித்தனி மந்திரங்களும்!
சிவபெருமானுக்கு உள்ள பஞ்ச (5) முகங்களும்! – உச்சரிக்க வேண்டிய தனித்தனி மந்திரங்களும்!
பிரம்மனுக்கு மட்டும்தானே நான்கு முகங்கள் அதனால்தானே அவனை நான்முகன் என்ற
ழைக்கப்படுகிறார். சிவனுக்கு 1 முகம்தானே இது என்ன புதுக்கதை என்று கேட்கும் பலரில் நீங்களும் ஒருவராகத்தான் இருப்பீர்கள். ஆனால் சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு என்ற தகவல் வெகு சிலருக்கே தெரிந்த ஒன்று. சிவபெருமானு க்கு உள்ள பஞ்ச (ஐந்து) முகங்கள் உண்டு. அந்த முகங்களுக்கான தனித்தனியாக உச்சரிக்க வேண்டிய மந்திரங்களும் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டு ள்ளன• அவற்றை அறிந்து தெளிந்து, உரிய முறையில் உச்சரித்து சிவபெருமானின் பூரண அருளை பெற்று வளமோடு வாழுங்கள்.
சிவனுக்கு பஞ்ச (5) முகங்கள்
1.தத்புருஷம்.
2.அகோரம்.
3.வாமதேவம்.
4. சித்தி யோசாதம்.
5.ஈசானம்
ஆகும்
1.தத்புருஷம் (Thathpurusham):
கிழக்கு நோக்கிய சிவமுகத்தை வழிபடும்போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்
‘நம-சிவாய’
2.அகோரம் (Agoram):
தெற்கு நோக்கிய சிவமுகத்தை வழிபடும்போது உச்சரிக்க வேண்டிய
‘நமசிவ’
3.வாமதேவம் (VamaDhevan):
வடக்கு நோக்கிய சிவமுகத்தை தரிசிக்கும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்
‘ஓம் ஐயும் கிழியும் சிவாய நம’
4.சத்யோஜாதம் (SathyoJadham):
மேற்கு நோக்கிய சிவமுகத்தை தரிசிக்கும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்
‘ஓம்-சிவாய நம’
5.ஈசானம் (Eesanam):
இது உச்சி. சிவனின்மேல் நோக்கிய முகம் இதனை ஆகர்ஷனம் என்றும் கூர்ந்து இருப்பது இதுவே, இதற்கு சிதம்பரம் தில்லை நடராஜர் எனக்கொள்ளலாம் இவர்க்கு நாம் ஜெபிக்க வேண்டிய மந்திரம்
‘ஊங் அங் நம ஓம்’
மேலும்
‘சிவாய நம ஓம் சி அங்’
என்று உச்சரித்தால் யோகநிலையில் குண்டலி சக்தியை கண்டு நலம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.