Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீட் தேர்வை எதிர்த்து உச்ச‍நீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதா தற்கொலை – மாணவர்கள் கொந்தளிப்பு

நீட் தேர்வை எதிர்த்து உச்ச‍நீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதா தற்கொலை – மாணவர்கள் கொந்தளிப்பு

நீட் தேர்வை எதிர்த்து உச்ச‍நீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதா தற்கொலை – மாணவர்கள் கொந்தளிப்பு

அரியலூரை சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில்

இன்று தற்கொலை செய்து கொண்டார். ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெ ற்றிருந்தார் அனிதா. ப்ளஸ் டூ தேர்வு அடிப்படையில் அனிதாவின் கட் ஆப் மதிப்பெ ண் 196.5 ஆகும். நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்களே பெற்றிருந்தார் அனிதா ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து நன்றாக படித்தவர் அனிதா.

ஆனால், மத்திய அரசு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவர் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துவிட்டது. மத்திய அரசின் இந்த முடிவினை எதிர்த்து மாணவி அனிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. ஆனால் நீட் தேர்வு அடிப்படையிலேயே கவுன்சிலிங் நடைபெற்றது. இதனால் விரக்தியடைந்த அனிதா, தன்னுடைய மருத்துவ கனவு கலைந்து போனதாக உறவினர்களிடம் கூறி வந்து ள்ளர். இந்த நிலையில் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், மாணவி அனிதா தனது வீட்டில் இன்று தற்கொலை செய்துகொண்டு ள்ளார். மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து அரியலூர் போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு முறையால் மருத்துவ இடம் கிடை க்கவில்லை என்ற விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். மாணவி அனிதாவின் தற்கொலை மிகப்பெரிய சோக த்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அப்பகுதியில் பல்வேறு மாணவ அமைப்புக்களும், பல கட்சிகளை சார்ந்தவ ர்களும் மக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு சட்ட‍ம் ஒழுங்கு சீர்கெடும் வாய்ப்பு உள்ள‍தாக தகவல்கள் தெரிவிக்கின்றன•

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: