Saturday, October 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அபூர்வ கோயிலை பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீக‌ தகவல்கள்


 

அபூர்வ கோயிலை பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீக‌ தகவல்கள்

அபூர்வ கோயிலை பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீக‌ தகவல்கள்

மனிதன், தானும் தன்கூட்ட‍மும் ஒழுக்க‍நெறியுடன் வாழ்வதற்காகவே கடவுள்க ளை

உண்டாக்கினான். அந்த கடவுள்களுக்கு என்று தனியாக ஒரு இருப்பிடத்தை கட்டி னான். அந்த இருப்பிடத்திற்கு கோயில் என்று பெயரிட்டான். அந்த கோயில்களில் வழிபாடுகள், பூஜைகள், அர்ச்ச‍னைகள், ஆராதனைகள் போன்றவற்றை தவறாமல் செய்து வருகிறான்.

மும்மூர்த்திகளில் ஒருவரும், அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் ஆதாரமாகவும் விளங்கும் சிவபெருமானை இரவு முழுக்க கண்விழித்து மனதார வழிபடும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுக்கவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிற து. இந்திய ஆன்மீகத்தின் அடிநாதமாக விளங்கும் சிவபெருமானுக்கு இத்திருநாட்டி ல் ஆயிரமாயிரம் கோயில்கள் உண்டு. அக்கோயில்களில் எல்லாம் வைத்து மிக ப்பெரிய சிவலிங்கத்தை கொண்டிருக்கும் கோயிலானது கர்னாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. அதோடு அதிக அளவிலான சிவலிங்கங்கள் இருக்கும் கோயில் என்ற சிறப்பையும் பெற்றிருக்கும் அபூர்வ கோயிலை பற்றிய சுவாரஸ்யமான தகவ ல்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

கோடி லிங்கேஸ்வரர் கோயில் (Kodi Lingeshwarar Temple):

கர்னாட மாநிலத்தில் தங்கசுரங்கத்திற்கு புகழ்பெற்ற கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற ஊரில் அமைந்திருக்கிறது கோடி லிங்கேஸ்வரர் கோயில் . இங்கு தான் 108அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்பதோடு மட்டுமில்லாமல் இக்கோயிலில் பல்வேறு அளவுகளிலான கிட்டத்தட்ட ஒரு கோடி சிவ லிங்கங்கள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே இக்கோயிலுக்கு கோடி லிங்கேஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்துள்ளது.

கோயில் வரலாறு:

கோடிலிங்கேஸ்வரர் கோயிலானது 1980ஆம் ஆண்டு சுவாமி சாம்ப சிவ மூர்த்தி என்பவரால் நிறுவப்பட்டு முதல் சிவலிங்கம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் சிவலிங்கங்களை பிரதி ர்ஷ்டை செய்ததன் விளைவே கோடிலிங்கங்கள் சேரக்காரணம் ஆகும்.

கோயில் அமைப்பு:

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் 108அடி உயரமுடைய சிவலிங்கமும் அதற்கு நேர் எதிராக 35அடி உயரம் கொண்ட நந்தியும் இருக்கிறது. மேலும் இக்கோயில் வளா கத்தினுள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, ராமர், லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர், கன்னிகாபரமேஸ்வரி, கருமாரியம்மன் ஆகிய கடவுளர் சந்நிதிகள் உள்ளன

கன்னிகாபரமேஸ்வரி கோயில்:

கோடிலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் இருக்கும் கன்னிகாபரமேஸ்வரி சந்நிதியினுள் ‘சிவ பஞ்சயாதி’ என்னும் சிவலிங்கம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ள து. இந்த லிங்கத்தை சுற்றிலும் விநாயகர், முருகர், பார்வதி மற்றும் நந்தி ஆகியவர்கள் நின்று வணங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது.

திருமண வரம் தரும் கோயில்:

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் இரண்டு நாகலிங்க மலர் மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும், மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டியும் சிவபெருமானை மனதுருகி வேண்டி நாகலிங்க மரத்தில் மஞ்சள் கயிறை கட்டிச்செல்கின்றனர்.

பூசை நேரம்:

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் இருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும் காலை மற்றும் மாலை ஆறு மணிக்கு 10 பூசாரிகளால் மேளவாத்தியங்கள் முழங்க பூசை கள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் ஒரு கோடி லிங்கங்களுக்கும் நாள் தவறா மல் பூசைகள் செய்யப்படுகிறது சிறப்பு.

பக்தர்களின் லிங்க பிரதிர்ஷ்டை வழிபாடு:

இக்கோயிலில் ஒரு வித்தியாசமான வழிபாட்டு முறை இருக்கிறது. தங்கள் வே ண்டுதல் நிறைவேற பக்தர்கள் தங்களால் முடிந்த அளவில் வெவ்வேறு அளவுக ளில் சிவ லிங்கத்தை இக்கோயில் வளாகத்தில் பிரதிர்ஷ்டை செய்கின்றனர். இந்த லிங்கங்கள் பக்தர்களின் பெயரிலேயே பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

சிறப்பு வசதிகள்:

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க ஏதுவாக இலவச ஓய்வறை கள் கோடிலிங்கேஸ்வரர் கோயிலை ஒட்டியே இருக்கிறது. ஏழைகள் பயனுறும் வகையில் வாரத்தில் நான்கு நாட்கள் 15-20 ஜோடிகளுக்கு இக்கோயிலின் நிறுவன ரான சுவாமி சாம்ப சிவ மூர்த்தியால் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.

எங்கே அமைந்திருக்கிறது?

கோலார் தங்கச்சுரங்கத்தில் இருந்து 6கி.மீ தொலைவில் கோடிலிங்கேஸ்வரர் கோ யில் அமைந்திருக்கிறது. பெங்களூரில் இருந்து கோலார்-பங்கார்பெட்டை வழியாக இக்கோயிலை அடையலாம்.

=> லிங்கேஸ்வரர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

2 Comments

Leave a Reply