விட்டத்தை பார்த்து யோசிக்கும் போது வந்த நொந்து போன வரிகள் இல்ல இல்ல வலிகள்
பல நேரங்களில் நம் வீட்டினுள் அமர்ந்து கொண்டு விட்டத்தை பார்க்கும் நேரத்தில்
(நாம் ஏன் விட்டத்தை பார்க்கிறோம் என்பது தனிக்கதை, இங்கு வேண்டாம்) பற்பல சிந்தனைகள் பலருக்கும் உதித்திருக்கும். அப்படி விட்டத்தை பார்த்து சிந்திக்கும்போ து வந்த நொந்து போன வரிகள்தான் நீங்கள் கீழே படிக்கவிருக்கிறீர்கள்.
பல்வேறு மொழிகளில் மனைவியை எப்படி அழைக்கிறார்கள் — மனைவி பற்றி ஒரு சிறு குறிப்பு!
முதலில் தமிழில் பார்ப்போம்
நமது மனையில் வெற்றிகரமாக வீற்றிருப்பவள் என்பதால், ‘மனைவி’ என்றும்…
நமது வாழ்வில் கடைசிவரை தொண தொணவென்று துணையாய் வருபவள் என்பதால், ‘துணைவி’ என்றும்…
பொன் நகையை வாங்கி தருமாறு நம்மை ஆட்டி வைப்பதால், ‘பொண்டாட்டி’ என்றும்…
நம்மை அவ்வப்போது பஞ்சராக்கும் ஜாதி என்பதால், ‘பொஞ்சாதி’ என்றும்…
காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால், ‘ஆத்துக்காரி’ என்றும்…
ஷாப்பிங் போய் விட்டு வீட்டுக்கு வந்ததும் நம்மை பார்த்து அவள் கேட்டதை எல்லா ம் வாங்கித்தர முடியாத துப்பு கெட்டவன் என்று காரி துப்புவதால், ‘வீட்டுக்காரி’ என்றும்…
பிறமொழிகளில் பார்ப்போம்.
கடைசிவரை வந்து உனக்கு பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா என்பதால், ‘பீபி’ (ஹிந்தி) என்றும்…
உனக்கு கடைசிவரை நாந்தான் எல்லாம் என்பதால், ‘பெல்லாம்’ (தெலுகு) என்றும்…
நம்மை மதி கெட்டவன் என்று கூறி அடிக்கடி அவள் சிரிப்பதால் ‘ஸ்ரீமதி’ (நேபாளி) என்றும்…
அவ்வப்போது நமது மனதை கார்த்திகை தீபம் போல் சூடாக்குவதால், ‘மனகார்த்தி’ (கன்னடம்) என்றும்…
கணவனை என்றும் திட்டிக்கொண்டே இருக்கின்றாள் என்பதால், ‘கன்டித்தி’ (கன்னடம்) என்றும்…
நம்மை திட்டுவதற்கு முன் இங்க பாருய்யா என்று ஆரம்பிப்பதால், ‘பாரியா’ (மலையாளம்) என்றும்…
வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi-Fi போல் நம் மேல் கண்காணிப்பு அலைவரிசையாய் தொடர்வதால் ‘Wife’ (ஆங்கிலம்) என்றும்…
கடைசிவரை நம்மை விட்டுப் பிரியாமல் ஜவ்வு மிட்டாய் போல் ஒட்டிக் கொண்டு வருவதால் ‘ஜவ்ஜத்’ (அரபிக்) என்றும்…
வேலைக்கு செல்லும்போது அசையும் சொத்து போல கையசைத்து பை பை சொல்வதால், ‘அஷாவா பபாய்’ (பிலிப்பைன்ஸ்) என்றும்…
காலம் முழுவதும் நாந்தான்யா உனக்கு பவுலர் என்று நம் மீது எதையாவது வீசிக்கொண்டு இருப்பதால், ‘பவுள’ (சிங்களம்) என்றும்…சொல்கிறார்கள்
இது மனைவியின் திட்டு காதில் விழாமல் இருக்க விட்டத்தை பார்த்து யோசிக்கும் போது வந்த நொந்து போன கருத்துகள்….
வாட்ஸ் அப்பில் வந்தது