Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனிக்கும் இல்ல‍ற வாழ்வில் – ஆணுக்கு 30 நொடிகள், பெண்ணுக்கு 15 நிமிடம் –

இனிக்கும் இல்ல‍ற வாழ்வில் – ஆணுக்கு 30 நொடிகள், பெண்ணுக்கு 15 நிமிடம்

நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பது ஆன்றோர்கள் வார்த்தை. நல்ல குடும்பம் பல்கலைக்கழகமாக

திகழ தேவைப்படும் அடிப்படை பண்பு என்ன‍வென்றால், கணவன் மனைவி, வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து, தொட்டுக்கொண்டும் வா ழ்வதே ஆகும். நல்ல‍ இல்ல‍ற வாழ்வினை வெற்றி கொள்பவ ர்களே வாழ்க்கையின் வெற்றியாளர்களாக சமுதாயம் கொ ண்டாடுகிறது.

ஆண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும், பெண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உடலளவி லும் மன அளவிலும் கூட மாறுபாடுகள் உண்டு. ஆண்களுக்கு செக்ஸ் தூண்டுதல் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி உடனடியாக வந்துவிடும். பெண்களுக்கு தம் பிரியாணி போல செக்ஸ் உணர்ச்சி வரு வதற்கு நேரமாகும். வந்தால் நீடித்த நேரம் இருக்கும்.

உணர்ச்சி வசப்படுவதிலும் வித்தியாசம் இருக்கிறது. உலக அளவில் நடந்த ஆரா ய்ச்சியில் ஆண்கள் விரை வில் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அதிக பட்சம் 30 நொ டிகளில் தயாராகிவிடுகிறார்கள். பெண்களுக்கு செக்ஸ் உணர்வு ஏற்படுவதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடம் தேவை. ஒரு மாட்டு வண்டி நகர வேண்டும் என்றால்  இரு மாடுகளும் இழுக்க வேண்டும்.

1 மாடு சரியாக இழுக்கவில்லை எனில் வண்டி நகராது. அது போலத்தான் செக்ஸ் உணர்வும். இருவரும் சரியாக இயங்கி னால்தான் செக்ஸ் வாழ்க்கை சுகமாக அமையும். மனைவி யை தயார்படுத்த கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும். முத்தம், லேசான தடவுதல் போன்ற இதமான செய ல்களை செய்து பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

மனைவிக்குப் பிடித்த விஷயங்களை மட்டும் பேச வேண்டும். எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்ற தெளிவும் இருக்க வேண்டும். பிடி க்காத விஷயங்களை பேசினால் மனைவியின் மனநிலை மாறி அன்று செக்ஸ் நடக்காமல் போக வாய்ப்புண்டு . ஆண்கள் ஓர் உணர்வில் இருந்து அடுத்த உணர்வுக்கு எளிதாக மாறிவிடு வார்கள்.

பெண்களின் உணர்வுநிலையை மாற்றுவதுகடினம். அன்று அவர்கள் வருத்தப்ப டும்படி நடந்து கொண்டால் நாள் முழுவதும் அவர்களின் மனதில் அந்த வருத்தமானது இருக்கும். காலையில் மனை வியை திட்டி விட்டு, இரவில் ‘படுக்கைக்கு வா’ என்றால் காரியம் நடக்குமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஜனன உறுப்பைக் கொண்டு செய்வது மட்டும் செக்ஸ் என நினைத்தி ருப்ப வர்கள் அதிகம்.

செக்ஸுக்கு முன்னும் பின்னும் பல விஷயங்களும் மன நிலைகளும் உண்டு. எல்லாம் சேர்ந்ததுதான் மன்மதக்க லை. மற்றவர்களுக்குத் தெரியாமலே மனநிலை யை அறி ந்து கொள்ள தம்பதி இருவரும் செக்ஸ் சிக்னல்க ளை தெரி ந்து வைத்திருக்கவேண்டும். மனைவி விருப்பத்தில் உள்ளா ரா? இல்லையா? இதை தெரிந்து கொள்ள சிக்னல்கள் உதவும்.

மனைவிக்கு சிலநேரம் செக்சில் விருப்பம் இல்லையெனில், புரி ந்து கொண்டு தள்ளி இருப்பது நல்லது. கட்டாயப்படுத்தி உறவு கொள்ள நினைக்கக் கூடாது. தம்பதி இடையே தகவல் பரிமா ற்றம் எளிதாகவும் சுமுகமாகவும் இருந்தால் தாம்பத்திய வா ழ்க்கையை எந்தப் பிரச்னையும் இன்றி சுகமாக அனுபவிக்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‌

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: