அதிமுக (O.P.S. and E.P.S.) பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்
அதிமுக (O.P.S. and E.P.S.) பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்
அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும் இரு ந்து வந்த
செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். அவரது இறப்பிற்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க• இரண்டாக மூன்றாக பிரிந்தன• இருந்தபோதிலும் கடந்த மாதம் ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணிகள் இணைந்தன• ஆனாலும் டி.டி.வி. தினகரன் போர்க்கொடி தூக்கினார். அவரது கட்டப்பாட்டில் கிட்டத் தட்ட 19 எம்.எல்.ஏ-க்களை வைத்திருந்தார்.
இந்நிலையில் தினகரனையும் சசிகலாவையும் அ.தி.முக•வில் இருந்து நீக்கும் முடி வோடு இன்றைய தினம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் பொதுக்கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதற்கிடையில் பெங்களூர் நீதிமன்றம் இந்த பொதுக்கூட்டத்திற்கு தடை விதித்தது. இருந்தபோதும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த பொதுக்கூட்டத்திற்கு தடை விதி க்க மறுத்துவிட்டது.
இந்த பரப்பான தமிழக அரசியல் சூழலில் அதிமுக தலைவர்களின் பொதுகூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தீர்மானத்தை வாசித்த ஆர்.பி. உதயகுமார், ராமர், லட்சுமணர் போல் நாட்டை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீட்டு எடுத்துள்ளனர் என்றார். மேலும் அ.தி.மு.க•வின் நிரந்தர பொதுச்செயலா ளராக மறைந்த ஜெயலலிதாவே நீடிப்பார். அவரது இடத்தில் வேறுயாரையும் வை த்திருக்க விரும்பவில்லை என்றும் அவருக்கு உரிய அதிகாரங்கள் யாவும் கட்சியின் ஒரு ங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பா ளர் திரு. எடப்பாடி பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கப்ட்டுள்ளதாக வும் தெரிவித்தார்.
இதில் நிறைவேற்றப்பட்ட மேலும் சில முக்கிய தீர்மானங்களை குறித்து பார்க்கலா ம்,
தீர்மானம் 1
• இரட்டை இல்லை சின்னத்தை மீட்க வேண்டும்.
தீர்மானம் 2
• இரு அணிகள் இணைந்ததை பாராட்டி தீர்மானம்.
தீர்மானம் 3
• அணிகள் இணைந்த நிலையில் ஒரே கட்சியாக கொண்டு வர வேண்டும்.
தீர்மானம் 4
• டிடிவி. தினகரனின் துணை பொதுச்செயலாளர் நியமனம் ரத்து. அவர் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் நியமனங்கள் செல்லாது.
தீர்மானம் 5
• ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
தீர்மானம் 6
• சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் ரத்து.
தீர்மானம் 7
• ஒருவரை சேர்க்கவோ, நீக்கவோ ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு அதிகாரம் அளிக்க ப்பட்டது.
தீர்மானம் 8
• கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வம் நியமனம்.
தீர்மானம் 9
• துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார்.
தீர்மானம் 10
• கட்சியின் சட்ட விதி 19ல் திருத்தம்.
தீர்மானம் 11
• பொதுச் செயலாளருக்கான அனைத்து அதிகாரங்களும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரு க்கும் உள்ளது.
தீர்மானம் 12
• இனி பொதுச் செயலாளர் பதவி கிடையாது என்று தீர்மானம் கொண்டு வரப்படும்.
தீர்மானம் 13
• பொறுப்புகளில் மாற்றம் இல்லை. அந்தந்த பொறுப்புகளில் இருந்தவர்கள் தொடருவார்கள்.
தீர்மானம் 14
• அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்ய ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அதிகாரம் வழங்க தீர்மானம்.
சசிகலாவின் அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டுள்ளதால், அதிமுக அ ணியில் அடுத்து என்ன நிகழும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. மேலும் டிடிவி தின கரன் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நாங்களும் தயாராகி விட்டோம் என்று கூறியுள்ளதால் அதிமுக அணியினரிடையே அசாதரணமான சூழ்நிலை நிலவி வருகிறது.