வாழ விடுங்கள்
(செப்டம்பர் 2017 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்)
மருத்துவராக முடியாத மன உளைச்சல் மரணத்தை தழுவிய மாணவி அனிதாவின் மறைவு வேதனைக்குரியது. அதிர்ச்சிக்குரியது. தவிர்க்கப்பட வேண்டியது.
வரும்முன் காப்போம் என்ற
தற்காப்பு நடவடிக்கையில் இறங்காமல் பதவி சுகத்து க்காக கூவத்தூரில் கும்மியடித்தல், பாண்டிச்சேரியில் பல் இளித்தபடி சுற்றுலா சுகம் கண்டும் தூங்கிய மாநில அரசின் மெத்தனத்துக்கும்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஅரசின் தீர்மானத்தை ஊறப்போட்டு கல்லூரிசேர்கைக்கான கால நெருக்கடி யாய்…. ஆகட்டும் பார்க்கலாம் பாணியில் பொய் நம்பிக்கைக் கொடுத்த மத்திய அரசின் ஒப்புக்கு சப்பாணி ஒப்புதலும்
யாராவது சாகும் வரை காத்திருந்து அதற்குப்பின் அரசியல் ஆதாயம் தேடி அலையும் மற்ற கட்சிகளின் கையாலா கத்த ன த்துக்கும் அநியாயமாய் ஒரு மாணவி பலியானது கண்ட னத்துக்குரியது.
இது ஒருபுறம் இருக்க எல்லாம் தெரிந்த கொம்பரங்களும் அரைகுறையாய் தெரிந்துகொண்டு அளந்துவிடுகிற அறிவு ஜீவுகளும் … உலகில் எது நட ந்தாலும் அதில் சாதி, மதம் அரசியலைத் திணித்து அவரவர் வாய்க்கு வந்தபடி காட்சி மற்றும் சமூக வலைதள ங்களில் உணர்ச்சி பொங்க பேசுவதைக் கேட்கும்போது… பார்க்கும்போது … எது சரி…. எது தவறு.. என்பது நீட் தேர்வு முறையை விடக் குழப்பமாய் உள்ளது.
தரமான மருத்துவமும், தரமான திறமையான மருத்துவர்க ளும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக் குக்கிராமங்கள் மட்டுமல்ல உலகமெ ங்கும் தேவை என்பதி லும்… மருத்துவம் தொழில்நு ட்பம் பொறியியல் உட்பட உயர்கல்வி பயில்வதற்கு தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்கள் தேவை
உலகத் தரத்துக்கு இணையான கல்வி முறையை ஒரே சீரான தரம் நிரந்தரம் என்றகொள்கையுடன் உருவாக்கவேண்டியது. காலத்தின் கட்டாயம் இவற்றில் எவருக்கும் மாறுப்பட்ட கருத்து இருக்க முடியாது.
நீட்டோ… குட்டையோ… சமச்சீரோ… சமமில்லாத சேறோ … மாநிலகல்வியோ.. மத்தியக்கல்வியோ எதுவாகினும் அதை திட்ட மிடுபவர்கள்… உருவாக்குபவர்கள் நம் இந்தியர்கள்தா ன் என்பதையும் அவர்கள் கல்வியாளர்கள்… கட்சிக்காரர்க ளோ.. மதவாதிகளோ… தீவிரவாதிகளோ இல்லை என்பதை ஏன் இந்த விவாத விளம்பர விரும்பிகள் உண ர்வதில்லை.
எந்த திட்டத்தில்தவறிருந்தாலும் அதை விவாதித்து திருத்த வேண்டியது சட்டமன்ற மோ… நாடாளுமன்றமோ அன்றி கட்சிக்காரர்கள் நடத்தும் காட்சி ஊடகங்களல்ல… எதுவுமே சரியில்லை… யாருமே சரியில்லை என்றால் இருக்கவே இருக்கிறது பெரிய நாட்டாமையான உச்சநீதி மன்றம் (அ தை யும் எவரும் மதிப்பதில்லை) என்பது வெட்கக்கேடு
இவற்றைத் தாண்டி இந்த கருத்துக் கண்ணாயிரங்கள் என்ன செய்ய முடியும்? எதை சாதிக்க முடியும்? தனி நாடு கேட்பது … மாணவர்கள் வகுப்பு க்களைப் புறக்கணியுங்கள் என்று கூச்சலிடுவது மாணவர்க ளின் கவனத்தை திசைத்திருப்பி… உணர்ச்சி வசப்பட வைப்ப து… அப்படி உணர்ச்சி வச ப்படுத்தி ஒரு சிலர் உயிர்விடக் கார ணமாவது அப்படி உயிர்விட்டபின் அதை வைத்து அரசியல் செய்வது சே! எப்போது இந்த தமிழகம் திருந்தும்?
தன் மகனோ மகளோ என்னவாக வேண்டும்… என்னவாக முடியும் என்பது பெற்றோருக்குத் தெரியும்… தன் மாணவன் – மாணவியின் திறமை என்ன? அவன் – அவள் யாராக வாய்ப்பதிகம் என்ப து ஆசிரியருக்குப் புரியும். எந்த திட்டம் எந்த கல்வி எதிர்காலத்துக்கு நல்லது என்பதை கல்வியாளர்க ளால் மட்டுமே கணிக்க முடியும். இதற்கு நடுவில் எதற்கு இந்த இடைத்தரகர்கள்.
சாவிலும் நோவிலும் குடும்பத்திலும் அரசியல் செய்கிறவர்களை புறக்கணிப்போம். மாணவ சமுதாயத்தை தெளிவான சிந்தனையோடு வாழவைப்போம்.
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
திரு.உதயம் ராம் : 94440 11105
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|