Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

12 மணிநேரம் வரை தண்ணீரில் ஊறிய பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால்

12 மணிநேரம் வரை தண்ணீரில் ஊறிய பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் (Benefits of Almonds Soaked in Water)

சுவையில் அலாதியானது இந்த பாதாம் பருப்பு. இந்த பாதாம் பருப்பை அப்படியே எடுத்துச்

சாப்பிட்டால் அருமையான ருசிதான் என்றாலும் பாதாமை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார்கள் நிபுணர்கள். அதை இரவுமுழுக்க ஊற வைத்துவிட்டுக் காலையில் சாப்பிடு வதால் பல நன்மைகள் உண்டாம்.

என்னென்ன நன்மைகள்?

1. தண்ணீரில் ஊறவைத்த பாதாமிலிருந்து லிபேஸ் என்கிற நொதி வெளியிவிடப்படுகிறது. இதனை உண்ணும்போது, நாம் சாப்பிட்ட மற்ற உணவுகள் எளிதில் செரிக்கி ன்றன.

2. உணவில் கெட்டகொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் என இரண்டு வகைகள் இருப்பதை அறிந்திருப்பீ ர்கள். அதில் கெட்டதைக் குறைத்து நல்லதை அதிகரிக்கும் குணம் ஊறவைத்த பாதாமுக்கு உண்டு. இது நமது உடல்நலத்துக்கு, குறிப்பாக இதயத்துக்கு நல்லது

3. தண்ணீரில் ஊறவைத்த பாதாமைச் சாப்பிட்டால் நமது இரத்த த்தில் ஆல்ஃபா டேகோபெரோல் என்கிற பொருள் அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டு க்குள் இருக்கும், இதேபோல் ஊற வைத்த பாதாமால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும்

4. பாதாமில்உள்ள கொழுப்புகள் உடலுக்கு நல்லவை. இவை வயிற்றை நிரப்பி விடு வதால், நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடமாட்டோம், உடல் எடை குறையும்

5. கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் போது மான அளவு கிடைக்கும்போது, குழந்தை ஆரோ க்கியமாக வளர்கிறது, பிறப்புக் குறைபாடுகள் குறைகின்றன. இந்த ஃபோலிக் அமிலத்தை ஊறவைத்த பாதாம் வழங்குகிறது

6. இவற்றுடன், ஊறவைத்த பாதாமில் உள்ள ஆன்டி-ஆக்ஸி டென்ட்களால் இளமை த்தோற்றம் கிடைக்கும், இதிலுள்ள பி17 வைட்டமின் புற்றுநோயை எதிர்க்கும்…

– ஆனந்தி வையாபுரி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: