தயிரில் 3 நாட்கள் வரை ஊறவைத்த சேனைக்கிழங்கு துண்டுகளுடன்…
சேனைக் கிழங்கு. இது பெயருக்கு ஏற்றாற்போல் நோய்களை நம்மிடம் அண்டவி டாமல்
இருக்கும் ஒரு சேனை போல் நம்மை காத்து நிற்கும். இதற்கு கருணை கிழங்கு என்ற பெயரும் உண்டு. இந்த கருணை கிழங்கை எப்படி மருந்தாக அதுவும் எந்த எந்த நோய்க்கு பய ன்படுகிறது என்பதை இங்கு காண்போம்.
மூல நோயினால் பாதிகப்பட்டவர்கள்
1. சேனை கிழங்கை எடுத்து நன்றாக தோல் சீவி சிறுதுண்டுகளாக நறுக்கி, பின் அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.
2. தேவையான தயிர் எடுத்துக் கொண்டு அந்த உலர்த்தப்பட்ட சேனைக்கிழங்கின் துண்டுகளை இதில் போட வேண்டும்.
3. தயிரில் 3 நாட்கள் வரை ஊறிய பிறகு அதில் எலுமிச்சை சாற்றை கலந்து நன்றாக அரைக்க வேண்டும்.
4. பனங்கற்கண்டு சேர்த்து அதனை பக்குவமாக பிசைந்து ஒரு முழு நெல்லிக் கனி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்
5. இதனை அப்படியே எடுத்து காலை, மாலை என சுமார் 6 (ஆறு) மாத ங்கள் வரை சாப்பிட்டு வந்தால் மூலம் முற்றிலும் முறிந்து போகும். உடல் ஆரோக்கியம் அடையும் உள்ளம் உற்சாகம் அடையும்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
– மணி
கருணை, Typhonium trilobatum, ARACEAE