Tuesday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் எதிரொலி- தி.மு.க• எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா

அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் எதிரொலி- தி.மு.க• எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் குறிப்பாக‌ பல்வேறு எதிர்பாராத அதிரடி திருப்ப‍ங்கள் நடந்துவருகிறது. ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணியுடன் இணை ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்தனர். இதற்கிடையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான திரு. ஜக்கையன் அவர்கள் கடந்த சில வாரங்களுக்குமுன்பு இ.பி. எஸ். ஓ.பி.எஸ். அணிக்கு தாவி சபாநாயகரை நேரில் சந்தித்து அதற்கான விளக்க‍ம் அளித்ததால் இவரை தவிர மீதமுள்ள‍ 18 எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவர்கள் யாரும் இது வரை நேரில் வந்து விளக்கம் அளிக்காத நிலையில் திடீரென இன்று காலை தின கரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பேரை தகுதி நீக்கம் செய்து சட்ட ப்பேரவை தலைவர் உத்த ரவிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பில் இந்திய அரசமைப்புச்சட்டம் 10 வது அட்டவணையின்படி ஏற்ப டுத்தப்பட்டுள்ள 1986ஆம் ஆண்டு சட்டபேரவை விதிகளின்படி (கட்சி மாறுதல் கார ணம் காட்டி தகுதியின்மையாக்குதல்) விதிகளின்கீழ் சட்டப்பேரவை தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக தங்க ள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டார்கள். இவ்வாறு சட்டப்பேரவை தலைவர் அறிவித்துள்ளார்.

1.தங்க தமிழ்செல்வன்
2.ஆர்முருகன்,
3.மாரியப்பன் கென்னடி
4.கதிர்காமு
5.ஜெயந்தி பத்மநாபன்
6.பழனியப்பன்
7.செந்தில் பாலாஜி
8.வெற்றிவேல்
9.எஸ்.முத்தையா
10.என்.ஜி.பார்த்தின்
11.கோதண்டபாணி
12.பாலசுப்ரமணி
13.ஏழுமலை
14.ரங்கசாமி
15.தங்கதுரை
16.எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்ரமணி
17.ஆர்.சுந்தர்ராஜ்
18.கே.உமா மகேஷ்வரி
ஆகியோர் ஆவர்.

இந்நிலையில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பினர் மனு அளித்தனர். மனு விசாரணைக்கு வந்தபோது சட்டப்பேர வை தலைவர் நடவடிக்கை தொடரும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திரு ந்தார். இந்நிலையில் திடீரென இன்று 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்ப ட்டுள்ளனர்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பத்திரிகையாளர் திரு. ஷியாம் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்து.. எடப்பாடி தலை மையிலான அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க‍ விருப்ப‍தாக ஒரு வதந்தி பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.

இக்கட்டான தருணத்தில் தி.மு.க• வின் செயல்தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள், சட்ட‍ வல்லுநர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் அவசர‌ ஆலோசனையில் ஈடு பட்டு வ‌ருகிறார். இந்த ஆலோசனையின் விளைவாக தி.மு.க• வை சேர்ந்த அனை த்து எம்.எல்.ஏக்களையும் நாளை காலை சென்னை அண்ணா அறிவாலயம் வர, திரு. ஸ்டாலின் உத்த‍ரவிட்டுள்ளார். இதில் அனைத்து தி.மு.க• எம்.எல்.ஏ.க்களோடு கூண்டோடு ராஜினாமா செய்யலாமா அல்ல‍து வேறு விதமான அரசுக்கு நெருக்கடி கொடுக்க‍லாமா என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

One Comment

  • திமுக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து, அவர்கள் தொகுதிகளில் இடைத்தேர்தலை கொணர்வார்களா?

Leave a Reply