Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்

கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்

நிலம் தொடர்பான தொன்றுதொட்டே வரும் வழக்கு மொழிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிவதில்லை. அவர்களுக்காகத்தான் இந்த

பதிவு. கிராம நத்தம் என்றால் என்ன என்பதைபறி விரிவான சட்ட‍ விளக்கத்துடன் காண்போம்.

அதென்ன கிராம நத்தம்?

நத்தம் என்றால் குடியிருப்பு பகுதி எனப் பெயர். கிராம நத்தம் என்றால் கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதி. அவ்வளவு தான்.

நத்தம் புறம்போக்கு என்றால் என்ன?

குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு என்று பெயர்.

சாதாரண புறம்போக்குக்கும், நத்தம் புறம்போக்குக்கும் என்ன வித்தியாசம்?

சாதாரண புறம்போக்கு என்றால் அரசுக்கு என்றாவது பயன்படும் நிலமாகவும் ஆனால் மக்களுக்கு குடியிருப்புக்கு பயன்படாத நிலமாகவும் இருக்கும். அதாவது ஏரி, ஆறு, கிணற்று பகுதிகள் போன்றவையை சொல்லலாம்.

கிராம நத்தத்திற்கும், நத்தம் புறம்போக்குக்கும் என்ன வித்தியாசம்?

கிராம நத்தமோ அல்லது நத்தம் புறம்போக்கோ எல்லாம் ஒன்றுதான். மக்கள் குடியிருக்க ஏதுவான இடம் என்றுதான் அர்த்தம். இந்த மாதிரியான நத்தம் நிலங்க ளில் பட்டா நீங்கள் வாங்கி விட்டால், அந்த நிலம் உங்களுக்கே சொந்தமாகிறது. பட்டா இல்லை என்றால் நாளைக்கு அந்த நிலம் அரசுக்கு தேவையானால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் உங்களை காலி செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு.

நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி குடியிருக்கலாமா?

நத்தம் புறம்போக்கு பகுதியில் தான் லட்சகணக்கான நபர்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நத்தம் விவரங்களை 2015 ம் ஆண்டு அரசு கணினி மயமாக்க முடிவு செய்தது. அதற்காக ரூ. 70,00,000/- ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நத்தம் நிலம் மொத்தமாக எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விவரங்கள் அரசு கட்டுப்பா ட்டுக்குள் வந்தாலும் இன்னும் கணினி மயமாக்கவில்லை. அதனை அரசு கணக்கெ டுத்தால் தான் நத்தம் நிலத்தில் வீடுகள் எவ்வளவு உள்ளது என்கிற புள்ளி விவரங்கள் வந்து சேரும்.

30.10.1987 முதல் 1.1.1988 வரை நத்தம் நில அளவைப் பணி நடைபெற்றது. (அரசாணை நிலை எண் – 1177,வணிகவரித்துறை மற்றும் அறநிலையத்துறை)

அரசாணை எண் – 1971, வருவாய்த்துறை (எஸ். எஸ். 2), நாள் – 14.10.1988 – ல் அங்கீ கரிக்கப்பட்டுள்ள நத்தம் நிலவரித் திட்ட அறிக்கையின்படி (அதாவது யூ. டி. ஆர் காலம் 1987 ல் முடிவடைகிறது. நத்தம் காலம் 1988 ல் தொடங்குகிறது) கிராம புறங்களில் நத்தம் மனைக்கட்டு பகுதிகளுக்கும், வேளாண்மை நிலங்கள் அல்லாத பிற காரியங்களுக்கு பயன்படுத்தப்படுபவைகளுக்கும், மனைவரி விதிக்க வழி வகை செய்யப்பட்டது. 1988 வரை நத்தம் பகுதிகளுக்கு யாருடைய அனுபவத்தில் எவ்வளவு விஸ்தீரணம் உள்ளது என்பதற்கோ நத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிவதற்கோ எவ்வித கணக்குகளும் பராமரிக்கப்படாமல் இருந்தது.

நத்தம் நிலவரித் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொருவருடைய அனுபவ த்திலும் உள்ள நத்தம் பகுதி தனித்தனியாக உட்பிரிவுகள் செய்யப்பட்டு நத்தத்தில் உள்ள பல்வேறு புறம்போக்குகளையும் அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் கண்டறிந்து அதன்மீது தக்க மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும் பொது உபயோகத்தில் உள்ள புறம்போக்கு பகுதிகளில் உள்ள பயன்தரும் மரங்களும் கணக்கிடப்பட்டு, அவை மரவரி விதிப்பின்றி இருக்குமானால், இத்த கைய இனங்களை பட்டியலிட்டு வருவாய் வட்டாட்சியருக்கு மேல் நடவடிக்கை க்காக அனுப்பப்பட்டன.

இத்திட்டத்தின் படி தோராய பட்டா ஒவ்வொரு நபருக்கும் தயாரிக்கப்பட்டு அவர்க ளிடம் சார்பு செய்யப்பட்டு, அதன் மீது ஆட்சேபனைகள் ஏதும் வரப்பெற்றால், விசார ணை நடத்தி தக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. இத்திட்டத்தினால் நத்தத்தில் ஒவ்வொருவருடைய அனுபவத்தில் உள்ள இடமும் வரையறை செய்யப்பட்டது. பொது உபயோகத்தில் உள்ள இடங்களும் தனித்தனியே உட்பிரிவுகள் செய்யப்பட்ட ன.

இதனால் நத்தத்தில் ஏற்படும் எல்லை பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும், பொது உபயோகத்தில் உள்ள செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து மேல் நடவ டிக்கை எடுக்கவும் வசதியாக இருந்தது. நத்தத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் அவர வர்களின் அனுபவத்தில் உள்ள விஸ்தீரணங்கள் நிர்ணயிக்கப்படுவதால் அதன் அடிப்படையில் வீட்டுவரி, மற்றும் மனைவரி வசூல் செய்ய மிகவும் உப யோகமாக இருந்தது. (அரசாணை நிலை எண் – 454,வருவாய்த்துறை, நாள் – 13.5.1996 ன்படி, மனைவரி தள்ளுபடி செய்யப்பட்டது).

— வ‌ழக்கறிஞர் பிறவி பெருமாள்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

13 Comments

  • BHARATHI

    வணக்கம். நீர்ப்பிடிப்பு பகூதி என்றால் என்ன? அதில் Govt Building கட்ட அனுமதி உண்டா? அதில் புதிதாக குளம் அல்லது குட்டை வெட்டலாமா?

  • Kotteeswaran.j

    ஐயா வணக்கம், என் பாட்டிக்கு என் பாட்டியின் தந்தை வீட்டு மனை ஒன்று எழுதிவைத்தார்(1951). அந்தமனையை என் பாட்டியின் தம்பி எழுதிவாங்கியதாக அவர்களது பெயர்களில் பட்டா மாற்றம் செய்து அனுபவித்து வருகிறார்கள்(20 ஆண்டுகளாக). என் பாட்டியிடம் எழுதிவாங்கியது என் தந்தைக்கு தெரியாது அவரது கையோப்பமும் இல்லை. அவர்களுக்கு பயந்து இவ்வளவு நாட்களாக கேட்கவே இல்லை. இந்த இடம் நத்தம் ஆகும். வில்லகம் எடுத்து பார்த்ததில் தற்போதுவரை என் பாட்டியின் பெயரில்தான் உள்ளது. இந்நிலையில் இவ்விடம் எங்களுக்கு கிடைக்குமா. கிடைக்குமாயின் நாங்கள் தற்போது செய்யவேண்டியது என்ன.

  • ஜோதி

    ஐயா
    எனது ஊர் ஆந்திராவிலுள்ள நகரி. நாங்கள் சுமார் 30ஆண்டுகாலமாக குசஸ்தலை ஆற்றில் இருந்து 100 அடி தூரத்தில் புறம்போக்கு நிலத்தில் 100குடும்பங்களுக்குமேல். வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி, சிமெண்ட் ரோடு, மின்சாரம், எல்லாம் வசதியும் உண்டு ஆனால் பட்டா மட்டும் கிடையாது என்கிறது அரசு. பட்டா வாங்க என்ன வழி ஐயா.

  • த.மணிகண்டன்

    ஐயா வணக்கம் எனது தந்தை வீட்டு மணையினை 1988 கிரையம் பெற்றார். இந்த மணைக்கு 1972 ஆம் ஆண்டில் ஒர் தாய் பத்திரம் உள்ளது. ஆனால் இந்த இடத்தில்1990 ல் மெத்தை வீடு கட்டி முடிக்கப்பட்டது அன்று முதல் இன்று வரை தொடர்ந்து எங்கள் அனுபவத்தில் உள்ளன இதற்கு பட்டா சிட்டா தேவை வருவாய் வட்டாட்சியர் பட்டா வழங்க மறுத்து உள்ளார் என்ன செய்யவேண்டும்

  • இக்பால் பாஷா'

    நத்தம் புறம்போக்கில் ௧௦௦ ஆண்டுகளுக்கு முன் கட்டிய அங்கீகாரமற்ற பள்ளிகுக்கு அங்கீகாரம் பெற பட்டா பெறலாமா?

  • முத்துப்பாண்டியன். நா

    ஐயா வணக்கம்…
    எங்கள் குடியிருப்பு பகுதியில் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. அதை எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கோவில் பெயர்களில் பதிவு செய்ய முடியுமா.

  • Anandhan

    நத்தம் இடத்தில் எனக்கு பட்டா இருக்கிறது அந்த இடத்திற்குள் வேரொருவர் தடம் கேட்கிறார்

  • Tamilarasu

    வணக்கம் என் பெயர் தமிழரசு எங்களுடைய கிராமத்தில் கடந்த 30 வருடமாக வசித்து வருகிறோம்.
    அனால் நாங்கள் வசிக்கும் இடம் 30 வருடத்திற்கு முன் 1000 ருபாய்க்கு வாங்கியது முறையாக பதிவு பன்னவில்லை அதை எங்களுடைய பெயரில் பதிவு பன்ன முடியுமா? வீட்டு வரி,கரன்ட் பில் அனைத்தும் உள்ளது. ஊர் நத்தில் உள்ளது வீடு

  • velPandi

    கிராம நத்தம் இடத்தில் குடியிருந்து வருகிறார்கள். யூ டி ஆர்-ல் கோவில் குடியிருப்பு என மாற்றப்பட்டுள்ளது. தற்போது கோவில் நிர்வாகம் எங்களுக்கு சொந்தமான இடம் வெளியேறுங்கள் என்கிறார்கள் இதற்கு ஆலோசனை வழங்கவும்

  • R.Shankar .Tiruvannamalai.

    நத்தம் வீட்டு மனை வாங்கும் முன் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன ஐயா? தெளி வாக கூறுங்கள் ?

  • விஜயகுமார்

    அய்யா நத்தம் நிலத்தில் வீடுகட்டி வாடகைக்கு விட்டால் என்ன நடவடிக்கை எடுக்கலாம், தயவுசெய்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன், நன்றி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: