மதிய உணவு முடித்தவுடன் சாப்பிட வேண்டிய மூலிகை
காலையில் உணவு சாப்பிடாமல் இருக்கக்கூடாது. மதியத்தில் உணவு நன்றாக சாப்பிட வேண்டும். அதேபோல்
இரவிலும் சாப்பிட வேண்டும். நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியத்தையும் தேவையான சக்திகளையும் அளிக்க கூடிய எந்த உணவாக இருந்தாலும் சரி அந்த உணவை நேரம்தவறாமல் சாப்பிடவேண்டும் அல்லது பசி எடுக்கும்போது சாப்பிட வேண்டு ம். அப்படிசாப்பிடும் உணவு,
சிலருக்கு குறிப்பாக சில ஆஸ்துமா நோயாளிகள் அஜீரணத்தை ஏற்படுத்தும். அந்த அஜீரணத்தினால் பாதிக்கப்படுபவர்கள், அதிலிருந்து விடுபட, எளிய மாமருந்து அவ ர்கள் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது.
ஆம்! மதிய உணவு உட்கொண்ட ஆஸ்துமா நோயாளிகளுக்கு அஜீரணம் அதாவது ஜீரண கோளாறுகள் ஏற்பட்டால், அவர்கள் மதிய உணவுக்குப்பின் வெற்றிலை மூன்றினை எடுத்து அதில் மிளகு சேர்த்து சுவைத்து சாப்பிட்டுவந்தால் இரைப்பும் குறை யும், உணவு ஜீரணக் கோளா றுகள் நீங்கும் என்கிறது சித்த & இயற்கை வைத்திய முறைகள்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளவும்.
Good news