Thursday, November 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கெஜ்ரிவால் என்னைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னதே எனது பாக்கியம்தான்- கமல்ஹாசன் உருக்கம்

“கெஜ்ரிவால் என்னைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னதே எனது பாக்கியம்தான்” – கமல்ஹாசன் உருக்கம் 

அரசுக்கு எதிராக சமீபத்தில் அதிரடி கருத்துக்கள் தெரிவித்து வரும் கமல்ஹாசனை சந்திக்க

சென்னை விமான நிலையம் வந்த கெஜ்ரிவாலை கமலின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் நேரில்சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி ஆழ்வார்பேட்டை யில் உள்ள‍ கமலின் இல்லத்திற்கு அழைத்து வந்தார். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக அவர்களது சந்திப்பு இருந்தது. இதனால் ஊடகவியலளாளர்களும் செய்தி யாளர்களும் அங்கே பரபரப்புடன் குழுமினர். க‌மல் கெஜ்ரிவால் சந்திப்பு முடிந்தவு டன் கமல்ஹாசன் செய்தியாளரிடம் தெரிவித்தது என்னவென்றால்,

“கெஜ்ரிவால் என்னைச் சந்திக்க வேண்டும் என்றுசொன்னதே என் பாக்கியம்தான். நாங்கள் சந்தித்துப்பேசியதை உங்களால் யூகிக்கமுடியும். ஊழலுக்கு எதிரானவர்க ள் அனைவருமே எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை . அந்தவகையில் இந்த உறவு தொடர்கிறது. எனது தந்தை இருந்தபோது, இந்த வீடு அரசியல் தொடர்புடன் இருந்தது. அதை நான் ஓரத்தில் இருந்து கவனத்திருக்கிறே ன்.

ஊழலுக்கு எதிராக நீண்ட காலமாகவே கெஜ்ரிவால் போராடி வருகிறார். ஊழல் மற்றும் மதவாதத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவருமே எனக்கு உறவின ர்கள்தான். கெஜ்ரிவால் உடனான இந்தச் சந்திப்பு எனக்கு சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவியது” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

Delhi Chief Minister, Mr. Arvind Kejriwal meets Kamalhasan in his Alwarpet house

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply