Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய அறிமுகம் – கைரேகை ஸ்கேனர் வசதியுடன் புதிய லேப்டாப்

புதிய அறிமுகம் – கைரேகை ஸ்கேனர் வசதியுடன் புதிய லேப்டாப்

கணிணி சந்தையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடனும், புதிய தொழில்நுட்பத்துட னும் புது புது லேப்டாப் (மடிகணிணி)கள் வந்துகொண்டே

இருக்கின்றன• அந்த வகையில் இன்று நீங்கள் காணவிருப்ப‍து கைரேகை ஸ்கேனர் வசதியுடன் கூடிய புதிய லேப்டாப் (மடிக்கணிணி)யின் வசதிக ளையும் சிறப்பம்ச ங்களையும் இனி காண்போம்.

ஐபால் நிறுவனத்தின் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள து. 13.3 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 360 கோணத்தில் வளைக்கும் திறன் கொண்டுள்ள புதிய லேப்டாப்பில் தொடுதிரை வசதி மற்றும் எடை குறைவாக இருக்கிறது. (iball camp book air 3)

குவாட்கோர் இன்டெல் பென்டியம் N4200 பிராசஸர், 4ஜிபி ரேம் கொண்டுள்ள புதிய லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. டிராக்பேடில் வழ ங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் மட்டுமின்றி விண்டோஸ் ஹெல்லோ மூலம் அன்லாக் செய்யும் வசதியும் இடம்பெற்றுள்ளது.

ஐபால் காம்ப்புக் ஏர்2 சிறப்பம்சங்கள்:

– 13.3 இன்ச் 1920×1080 பிக்சல் 10-பாயின்ட் மல்டி-டச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
– குவாட்கோர் இன்டெல் N4200 பிராசஸர்
– இன்டெல் எச்டி கிராஃபிக்ஸ் 505
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– பில்ட்-இன் கீபோர்டு மற்றும் டிராக்பேட்
– விண்டோஸ் 10 இயங்குதளம்
– 2 எம்பி முன்பக்க கேமரா

ஐபால் காம்ப்புக் ஏர்3 லேப்டாப் மொத்தம் 1.58 கிலோ எடை கொண்டிருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 4 ஸ்பீக்கர்கள், டூயல் பேன்ட் வைபை 802.11ac, ப்ளூடூத் 4.0, 2யுஎஸ்பி 3.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், கை ரேகை ஸ்கேனர் 37 Wh லி-பாலிமர் பேட்டரி மூலம் சக்தியூட்ட ப்படுகிறது. இந்தி யாவில் ஐபால் காம்ப்புக் ஏர்3 விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

– மா மலர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: