`ராஜா ராணி’ கனவுக்கன்னி நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் – மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்
ஆண்டுதோறும் வெளிவரும் இந்தியத் திரைப்படங்களின் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இதனால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்துக்கு பஞ்சமில்லை. இதற்கு கார ணம் புதிய முகங்களின் அறிமுகங்களும், திருமணத்திற்கு பிறகு நடிகைகளின் ரீ எண்ட்ரி களும் தான்.
திருமணத்திற்கு பிறகு 36 வயதிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரியானார் ஜோதிகா. அவரைத் தொடர்ந்து அமலா பால் வந்தார் இடையில் இவருக்கு விவாகரத்து கிடைத்தது தனிக்கதை. இவர்களைத் தொடர்ந்து தற்போது திருமணத்திற்கு பிறகு ரீ எண்ட்ரி ஆகும் நடிகை யார் என்றால்
நேரம் தமிழ்த்திரைப் படத்தின்மூலம் தமிழில் அறிமுக மானவர் நடிகை நஸ்ரியா நசிம். இவரது முதல் திரை ப்படமே வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து இவரு க்கு தொடர்ச்சியாக பலபடவாய்ப்புகள் வந்தது. அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான `ராஜா ராணி’ பட த்தின்மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து தனுஷுடன் `நையாண்டியயும், `வாயை மூடி பேசவும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும் மலையாளத்தில் பல படங்களிலும் நடித்தார். இந்நிலையில், மலையாள படஉலகின் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாஷிலுடன் நஸ்ரியாவுக்கு திருமணம் நடந்தது. அதுமுதல் பட ங்களில் நடிப்பதை தவிர்த்துவந்த நஸ்ரியா நீண்டஇடைவே
ளை க்கு பிறகு மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமா கி இருக்கிறார்.
அந்த படத்தை மலையாளத்தின் முன்னணி இயக்குநராக வலம் வரும் அஞ்சலி மேனன் இயக்குகிறார். இந்த படத்தில் பார்வதியும் முக்கிய கதாபாத்திரதத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கன வே அஞ்சலிமேனன் இயக்கத்தில் `பெங்களூரு டேஸ்’ என்ற மலையாள படத்தில் நஸ்ரியா, பார்வதி இணைந்து நடித்திருந்த னர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் புதிய கதாநாயகனுடன் ஜோடியாகிறார் நடிகை நஸ்ரியா நசீம் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் பொன்வண்ணன், நாஸர், நடிகை அம்பிகா ஆகியோர் நடிக்க விருப்பதாகவும் தகவல்கள் தெரிவி க்கின்றன•