“என்னை தப்பாக காட்டும் ஒரு படத்தில் நான் நடிக்க மாட்டேன்” – நடிகை நிக்கி கல்ராணி ஆவேசம்
புதிய இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் (New Director Santhosh Jayakumar) இயக்கத்தில் கௌதம் கார்த்திக் (Gowtham Karthick) கதாநாயகனாகவும், நடிகை நிக்கி கல்ராணி (Nikki Galrani) கதாநாயகியாகவும் நடித்த சமீபத்திய
திரைப்படம்தான் ஹரஹர மகாதேவகி (Harahara Mahadevgi). இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் பேசியதாவது,
“இது 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். ‘ஏ’ சான்று (A Certificate) பெற்ற படம். ஆனால் எந்த தப்பான காட்சியும் இதில் இருக்காது. முதல் பாதி காதல். இரண்டாம் பாதி அதில் பிரிவு என்று பரபர ப்பாக கதை நகரும்” என்றார்.
இதில் பேசிய நிக்கிகல்ராணி (Nikki Galrani), “என்னுடைய எல்லா படத்தையும் போல இதுவும் நல்ல படம் தான். இந்த படம் ஒரு ‘அடல்ட் காமெடி’ (Adult Comedy) படம். இந்தபடத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் வருவதுபோல் தான் இருக்கும். கதை பிடித்திரு ந்ததால் நான் நடித்தேன்.
இந்த படத்தில் யாரையும் தப்பாக காட்டுவது போல் காட்சி கள் இல்லை. ஆபாசம், வன்முறை இல்லாமல் இந்த படத்தை நாங்கள் எடுத்துள்ளோம். என்னை தப்பாக காட்டும் ஒரு பட த்தில் நானே நடிக்க மாட்டேன்” என்று கூறினார். கவுதம் கார்த்திக், “இது முழுமையாக காமெடி எண்டர்டெய்னர். 1 இடத்தில் 4நண்பர்கள் கூடினால் அவர்களுக்குள் எப்படி பேசி க்கொள்வார்களோ அதேபோல்தான் இப்படத்தில் காட்சிகள் இருக்கும்” என்று தெரிவித்தார்.