கூடாதா? கூடாதா? கூடாதா? கூடாதா?
கூடாதா? கூடாதா? கூடாதா? கூடாதா? என்ற தலைப்பை படித்து விட்டு இங்கு வந்த வர்களின் மனத்தில்
ஏன் இதற்கு வைத்தது ஏன்? எதற்காக இப்படியொரு தலைப்பை வைத்தீர்கள் என்ற கேள்விகள் இயற்கையாகவே எழும். அந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்க கீழுள்ள எனது கவிதையை படித்து விட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்க வேண்டுகிறேன்.
அரசியல்வாதிகள் நடிக்கும்போது
நடிப்பவர்கள் அரசியல் பேசக்கூடாதா?
அரசியல்வாதிகள் அழும்போது
அழுதவர்கள் சிரிக்கக் கூடாதா?
அரசியல்வாதிகள் குனியும்போது
குனிந்த இனம் தலைநிமிரக்கூடாதா?
அரசியல்வாதிகள் மரம் வெட்டும்போது
மரம் நட்டவர்கள் கேள்விக் கேட்கக் கூடாதா?
அரசியல்வாதிகள் வாக்கை மறக்கும்போது
வாக்ளித்தவர்கள் அவர்களை மறுக்கக் கூடாதா?
அரசியல்வாதிகள் குழிதோண்டும்போது
தோண்டிய குழியில் அவர்களை புதைக்கக் கூடாதா?
– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
www.vidhai2virutcham.com
vidhai2virutcham@gmail.com
பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க