நெய் விட்டுப் பொரித்த உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால்
ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த நெய்-ஐ தினந்தோறும் மதிய உணவுடன் கலந்து சாப்பிட பரிந்துரைக்கப்படுள்ளது.மேலும்
இந்த நெய்யில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன• அதேபோல் உலர் திராட்சையும்தான். கூடுதல் சுவைக்காக சேர்க்க ப்படும் இந்த உலர்திராட்சையில் எண்ணற்ற மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன. இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் என்னமாதிரியான மாமருந்தாக இருக்கும் என்பதை கீழுள்ள வரிகளில் காண்போம்.
அடுப்பை பற்றவைத்து ஒரு வாணலியை வையுங்கள்.வாணலி நன்றாக காய்ந்தவுடன் சிறிது நெய் போடுங்கள். அதன்பிறகு சுமார் 25 கிராம் அளவு உலர்திரா ட்சைகளை போட்டு மேலும் சிறிது நெய் சேர்த்து நன்றாக பொரித்து எடுங்கள். நெய்யில் பொரித்தெடுத்த அந்த உலர் திராட்சைகளை சூடு ஆறிய பின் உடல் சூட்டினால் உண்டாகும் இருமலால் பாதிக்கப்பட்ட வர்கள் சாப்பிட்டு வந்தால் அந்த சூடு தணியும். இருமல் இல்லாது போகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்ளவும்.
English Summery: