Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோயில் கொடிமரமும் – அதில் ஒளிந்துள்ள‌ விஞ்ஞான உண்மைகளும் – ஆன்மீகத் தகவல்

கோயில் கொடிமரமும் – அதில் ஒளிந்துள்ள‌ விஞ்ஞான உண்மைகளும் – ஆன்மீகத் தகவல்

இந்துக்கள் ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இந்து மதத்தில் இல்லை. ஆனால்

ஆலயங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் குடியிருக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஆகம முறைப்படி இந்த ஆலயங்கள் கட்டப்பட் டுள்ளன.

ஓர் ஆலயம் மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்தி ருப்பதுபோல் கட்டப்படுகிறது. ஆலயத்தின் க ர்ப்பக்கிகம் முகமாகவும், அர்த்த மண்டபம் கழு த்தாகவும், இருதோள்கள் துவார பாலகர் நிற்கு மிடமாகவும், கொடி மரம் வரையுள்ள பாகம் உடம்பாகவும், கொடிமரம் முதுகுத்தண்டாகவு ம், பாதங்கள் வாயிற் கோபுரமாகவும் இருக்கி ன்றன.

ஆலயங்களில் இந்த கொடிமரம் கருவறைக்கு நேராகத்தான் நடப்பட்டிருக்கும். கொ டி கம்பத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமியில் இருக்கும்படி நடுவர். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களிலிருந்து கொடி மரம் செய்வர்

விண்ணில் இருந்துவரும் மின்னூட்டம்பெற்ற பிரபஞ்ச கதிர்களை கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் ஈர்த்து கருவறையில் இருக்கும் மூலவ‌ர்மீது பாய்ச்சும். இந்த சக்தியானது கருவறைக்கு இருபுறம் இருந்து கடவு ளை வணங்கும் பக்தர்கள் மீது பாயும். இந்த பிரபஞ்ச சக்தியை உள்ளவாறு ஏற்றுக் கொள்ளும் தன்மை சாதா ரண மானுடர்களுக்கு இல்லை.

இந்த கொடிமரமானது இந்த பிரபஞ்ச சக்தியை ஈர்த்து, பக்தர்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு இந்த சக்தியைமாற்றி இருபுறம் பாய்ச்சும். கொடிமரம் இல்லை என்றால் இந்த அதீத சக்தியின் தன்மையை மானுடர்கள் ஏற்றுக் கொள்வது கடினம். இதற்காகத்தான் கொடிமரம் கோயில்களில் உள்ளன.

ஏதோ புரியாத பெயரில் எமது மின்னஞ்சலுக்கு வந்த பதிவு இது.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: