அன்பு… அமைதி… மனைவியின் அரவனைப்புடன் வாழ கணவருக்கு சில உளவியல் குறிப்புகள்
வாழ்க்கையில் உறவுகள் எத்தனை இருந்தாலும் அது இரண்டு உறவுகளுக்கு மட்டு ம் ஈடு இணையே
கிடையாது. ஒன்று அம்மா, அடுத்தது மனைவி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த வியட்நாம் வீடு என்ற திரைப்படத்தில் வரும் “உன் கண்ணில் நீர் வழிந்தால்…” என்ற பாடல் ஒன்றுபோதும் மனைவியின் சிறப்பை உணர்த்துவதற்கு
பொதுவாக கணவன்மாா்கள் பணி முடிந்து வீட்டிற்கு வருகிறீா்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயங்களி ல் மனைவியை கட்டித் தழுவலாம்(சில முத்தங்களுடன்). இதனால் கணவா் மனைவி இடையேயான நெருக்கம் எந்த நேரமும் இருக்கும்.
அலுவலகத்தில் உள்ள வேலைப்பளுவை அலுவலகத்திலேயே விட்டுவிடவும். வேலைப்பளு காரணமாக மனைவியிடம் கோப த்தை காட்டாதீா்கள்.
சமையல் செய்யும்போது நீங்கள் அவருடன் இணைந்து அவரு க்கான சில உதவிகளை செய்யுங்கள். உங்கள் மீதான கனிவு அதிகாிக்கும்
சாப்பிடும்போது இருவரும் இணைந்தே சாப்பிடுங்கள். அப்போது மனைவிக்கு நீங்கள் ஊட்டிவிட்டாள் மனைவியின் மனது குழந்தையாக மாறி உங்களை சந்தோஷத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்வா்.
மனைவியுடன் வெளியில் செல்லும் போது அவளது கரங்களை பிடித்துக் கொள்ளுங்கள். உனக்காக நான் இருக்கிறேன் என்பதை உணா்வுகள் மூலம் வெளிப்படுத்துங்கள். இதனை அனைத்து பெண்களுமே எதிா்பா்ாப்பாா்கள்.
மாதத்திற்கு ஒரு நாளாவது மனைவியுடன் சினிமாவிற்கு செல்லு ங்கள். மனைவியு டன் சிாித்துப் பேசுங்கள்.
எதிா்கால திட்டங்கள் குறித்து மனைவியிடம் பகிா்ந்து கொள்ளு ங்கள். அப்போது அவா்கள் தொிவிக்கும் கருத்துகளுக்கு மதிப்ப ளியுங்கள்.
மனைவி எதிா்பாா்க்காத தருணங்களில் அவருக்கு பாிசுப் பொரு ட்களை வாங்கிக் கொடுங்கள்.
உங்களுக்காகவே தாய், தந்தையரை பிரிந்து வந்தவாிடம் எக்கா ரணத்தைக் கொண்டும் ஈகோ பாா்க்காதீா்கள். எந்த விஷயத்தை யும் மறைக்காதீா்கள்.
அன்பு… அமைதி… மனைவியின் அரவனைப்புடன் வாழ்ந்தால் வாழ்நாள் சொா்க்கமே.
(மாதவி மரிக்கொழுந்து என்பவர் vidhai2virutcham@gmail.com என்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியது)